Sivagangai

News May 4, 2024

5 மையங்களில் நீட் தேர்வு

image

சிவகங்கை மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாளை (மே 5) நடைபெறவுள்ளது. இதில் 250‌ பேர் உட்பட மாதிரிப்பள்ளியில் 82 மாணவர்கள் எழுத உள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 5 மையங்களில் தேர்வு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

சிவகங்கையின் ஆயிரம் ஜன்னல் வீடு அம்சங்கங்கள்!

image

சிவகங்கையில் செட்டிநாட்டுப் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய செட்டிநாட்டு வீடுகளில் ஒன்றாகும். பாரம்பரியம் மிக்க நகரமாக அறிவிக்கட்ட காரைக்குடி பகுதிக்கு உரித்தான சுண்ணாம்பு கற்களை பயன்படுத்தி கட்டபட்டுள்ளது. இந்த வீடு 20,000 சதுர அடியில், 25 பெரிய அறை, 5 கூடங்களுடன் அமைந்துள்ளது. 1000 சன்னல் கதவுகளுடன் இவ்வீடு கட்டப்பட்டுள்ளது. வீட்டின் பிரதான வாசல் கதவின் சாவி கிட்டத்தட்ட 1 அடி நீளமுள்ளது.

News May 4, 2024

காயலாங்கடை போல் காட்சி அளிக்கும் வாகனங்கள்

image

திருப்புவனம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர், கார்கள் நிரம்பி காயலான் கடை போல் காட்சியளிக்கிறது. காவல் துறை கூறுகையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை பாதுகாக்க முடியவில்லை மழையிலும், வெயிலிலும் வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கிடப்பதால் பழைய இரும்பு கடை போல காட்சியளிக்கிறது என்று கூறினார்கள் .

News May 3, 2024

சிவகங்கை: பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும்

image

சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் பருகுதல் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News May 3, 2024

கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில்  2023–2024 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாணாக்கர்களின் நலன் கருதி கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள்  வருகின்ற மே.7 முதல் மே.17 வரை சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (மே-3) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

சிவகங்கை மாவட்டத்தில் 40 நிறுவனங்களின் மீது மதுரை தொழிலாளர் துறை நடவடிக்கை

image

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தன்று கடைகள்,உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமெனில் 2சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.பணியில் ஈடுபடுத்த விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் படிவம் பெற வேண்டும் இதில் சிவகங்கை மாவட்டத்தில் 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

News May 3, 2024

புதிய தொழில் நுட்பம் அறிமுகம்: ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாகனப் புகைப்பரிசோதனை மையங்களின் செயல்பாட்டினை மேம்படுத்திட புதிய PUCC 2.0 Version -ஐ வரும் திங்கட்கிழமை (6.5.2024) முதல் அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மையங்களும்  நிறுவி  வாகனப் புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். அவ்வாறு, செய்ய தவறும் வாகனப் புகைப் பரிசோதனை மையங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும் என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News May 2, 2024

பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

image

சிவகங்கை, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலை கிராமம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, களத்தூர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி கிராம பொதுமக்கள் சிவகங்கை மாவட்டம் ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர்.

News May 2, 2024

சிவகங்கை: 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தொழிலாளர் தினமான நேற்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் விதிமீறி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் 114, ராம்நாட்டில் 34, விருதுநகரில் 97 நிறுவனங்கள் மீது நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

புனித மூவரசர் தேவாலயத்தில் நவ நாள் கொடியேற்றம்

image

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நேற்று பள்ளித்தம்பம் புனித மூவரசர் தேவாலயத்தில் நவ நாள் திருவிழா பங்குத்தந்தை சூசை சவரி யண்ணன் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. மே.9ஆம் தேதி காலையில் நவ நாள் திருப்பலி, மாலை 4.30 மணிக்கு பொங்கல் விழா இரவு 8 மணிக்கு மின்னொளி தேர் பவனி நடைபெற உள்ளது.