Sivagangai

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 11, 2024

சிவகங்கை மாணவி அசத்தல்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சகாயமாதா பள்ளி மாணவி M.கிருத்திகா என்பவர் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று அசத்தியுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

News May 10, 2024

சிவகங்கை மாவட்ட வீரர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு

image

மாநில கிக் பாக்ஸிங் போட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அமெச்சூர் பாக்ஸிங் சங்கம் சார்பில் நடந்தது. இதில், 34 கிக் பாக்ஸிங் வீரர்கள் சிவகங்கை மாவட்ட சார்பாக பங்கேற்று 4 தங்க பதக்கங்களையும், 6 வெள்ளி பதக்கங்களையும் 10 வெண்கல பதக்கங்களையும் வென்று தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டிக்கு நேற்று தேர்வாகியுள்ளனர்.

News May 10, 2024

கால்நடைகளை பராமரிக்கும் வழிமுறைகள்

image

சிவகங்கையில் உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை வெப்ப அயற்சியில் இருந்து பாதுகாத்திட தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம். செல்ல பிராணிகளை காருக்குள் வைத்து அடைக்கக்கூடாது. வெயிலில் நடமாடவும் விட வேண்டாம். கால்நடைகள் நோய் வாய்ப்பட்டால் 1962 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News May 10, 2024

சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

சிவகங்கை மாவட்டத்திற்கு எச்சரிக்கை

image

வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

News May 10, 2024

சிவகங்கை 2ஆம் இடம்!

image

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.45% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.2 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.33 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் 2ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

10th RESULT: சிவகங்கையில் 97.02 % தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 97.02 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 95.54 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 98.43 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 9, 2024

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மார்ச். 16ஆம் தேதி முதல் ஏப்.19ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.65,91,730 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையில் இருந்து , உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் அடிப்படையில் ரூ.54,02,160 தொகை விடுவிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது என  சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

சிவகங்கை: மாணவர் சேர்க்கைக்கு இலவச சேவை மையம்

image

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவு செய்ய கல்லூரியின் கணினி ஆய்வகத்தில் இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் இந்த இலவச சேவை மையத்தை அணுகி, தங்களது விண்ணப்பத்தினை இறுதி நாளான மே.25ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் க.துரையரசன் இன்று தெரிவித்துள்ளார்.