Sivagangai

News May 14, 2024

சிவகங்கை: பிரதானக் கால்வாய் தண்ணீர் திறப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் மதகு அணை இடது பிரதானக் கால்வாயில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு நேற்று தண்ணீா் திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்று (மே 14) வரை தண்ணீா் திறக்கப்படும். புதன்கிழமை முதல் விரகனூர் மதகு அணையிலிருந்து பார்த்திபனூர் மதகு அணைவரை பகுதி இரண்டில் உள்ள சிவகங்கை மாவட்ட பூர்வீக வைகைப் பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும்

News May 13, 2024

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

image

முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விருப்பமுள்ள மாணவர்கள் வரும் ஜூன். 07ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையமான” சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாணவர்கள் நேரில் வந்து Online மூலம்  விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News May 13, 2024

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக குற்றச்சாட்டு

image

திருப்பத்தூர் அருகே டி.மாம்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்துவதாக டி.மாம்பட்டி விஏஓ லாவண்யா எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், டி.மாம்பட்டிபகுதியைச் சேர்ந்த சுப்புரமணியன் (66) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 13, 2024

சிவகங்கை மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

image

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழுவில் தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு ஓய்வு அரசு ஊழியர், ஆசிரியர், மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை<> Ecourt <<>>website -ல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மே 24 மாலை 5:00 மணிக்குள் நேரிலோ, தபால் மூலம் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு, நீதிமன்ற வளாகம், சிவகங்கையில் அனுப்பிவைக்க வேண்டும்.

News May 12, 2024

லிச்சி பழம் கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பகுதியில் கோடைக்கு குளிர்ச்சி தரும் விதத்தில் லிச்சி பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இப்பழ சீசன் துவங்கியதை அடுத்து காரைக்குடிக்கு இந்த பழம் விற்பனை துவங்கியுள்ளது. மேற்கு வங்காளத்தில் அதிகளவில் விளைகின்றன. அங்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு வந்துள்ளன. காரைக்குடி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.600க்கு விற்கப்படுகிறது.

News May 11, 2024

சிவகங்கை மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

நரிக்குறவர் மாணவர்களுக்கு வரவேற்பு

image

சிவகங்கையில் பழமலை நகரில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி மன்னர் மேல்நிலைப் பள்ளியிலும் தனுஷ் கே. ஆர் மேல்நிலைப் பள்ளியிலும் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர் இவர்கள் தேர்வு முடிவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதை எடுத்து நேற்று அந்த மாணவர்களை அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

News May 11, 2024

சிவகங்கையில் ஊதிய உயர்வு வழங்க கோரி மனு

image

சிவகங்கை மாவட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.319ஐ இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்

News May 11, 2024

இளைஞர்கள் இந்திய தூதரகங்களை தொடர்புகொள்ளவும்

image

சிவகங்கை மாவட்டத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் ”அயலகத் தமிழர் நலத்துறை” அல்லது ”குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, உண்மைத் தன்மையை உறுதி செய்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.