Sivagangai

News February 28, 2026

சிவகங்கை: 12 ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில், வரும் 2.3.2026 அன்று நடைபெறவுள்ள மார்ச் 2025-26 ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வினை, மாவட்டத்தைச் சார்ந்த மொத்தம் 16,154 பள்ளி மாணாக்கர்களும், 425 தனித்தேர்வர்களும் எழுதவுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 28, 2026

சிவகங்கை: விமான பணியாளர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சியினை பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News February 28, 2026

சிவகங்கை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாத்தனுமா.?

image

பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க.

News February 28, 2026

சிவகங்கையில் சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்.!

image

சிவகங்கை மக்களே, உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது. பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (04575240388) அணுகலாம். SHARE பண்ணுங்க…

News February 28, 2026

சிவகங்கை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா.?

image

சிவகங்கை மக்களே, ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு<> கிளிக் <<>>செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்க

News February 28, 2026

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>-1 என்ற <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 28, 2026

சிவகங்கை: EPS-ஐ மக்கள் நம்ப மாட்டார்கள் – அமைச்சர்

image

மானாமதுரையில் நேற்று நடைபெற்ற திமுக மகளிர் அணி கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-யும், அவரளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். மேலும், திமுக அரசு மகளிர் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக்கூறிய அவர் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றார்.

News February 28, 2026

சிவகங்கை: லஞ்சம் வாங்கிய VAO க்கு.. 3 ஆண்டு சிறை

image

சிவகங்கை – மேலூர் சாலை காமராஜர் காலனியை சேர்ந்த அழகு என்பவரின் நிலத்திற்கு வரி நிர்ணயம் செய்து தர 2006 ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் நாகராஜனை சந்தித்த போது ரூ.1000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு லஞ்சம் வழங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்நிலையில் நாகராஜனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

News February 27, 2026

சிவகங்கை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் – APPLY…!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு<> க்ளிக்<<>> செய்து Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை தேர்தெடுத்து ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க

News February 27, 2026

சிவகங்கை: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

சிவகங்கை மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கி (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை

Indian bank: 87544 24242

SBI:  90226 90226

HDFC: 70700 22222

Axis: 7036165000

Canara Bank – 9076030001

இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!