Sivagangai

News May 29, 2024

சிவகங்கை: மேலும் ஒருவன் கைது

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த மே.21ஆம் தேதி நகை வியாபாரியை வழிமறித்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டினார்.

News May 29, 2024

அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

image

திருப்புவனம் தாலுகா உட்பட்டூர், பூவந்தி, மணலூர் ஆகிய பகுதிகளில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுக மாணவரணி பொருளாளர் மணிமாறன் கண்டன சுவரொட்டிகளை நேற்று ஒட்டியுள்ளார். அதில் புரட்சித்தலைவி அம்மாவை அவதூறாக பேசி வரும் அரைவேக்காடு அண்ணாமலையை கண்டிக்கிறோம் எனவும் அண்ணாமலை தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சுவரொட்டியில் பிரசுகரிக்கப்பட்டுள்ளது .

News May 29, 2024

காதலர்கள் தற்கொலை – போலீசார் விசாரனை

image

திருச்சியை சேர்ந்த முத்துக்குமாரும் காரைக்குடியை சேர்ந்த சுபஸ்ரீயும் காதலித்து வந்தனர். வேலையின் நிமித்தமாக முத்துக்குமார் காரைக்குடியில் தங்கி இருந்த நிலையில் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலை அறிந்து சுபஸ்ரீயும் தான் படிக்கும் புதுக்கோட்டை அருகே உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

News May 28, 2024

சிவகங்கை: தாய், தந்தை உள்பட மூவா் கைது

image

சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன்குமார் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன் மேற்பார்வையில் திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளா் சிவக்குமாா் திருப்பாச்சேத்தி அருகே 4 மாத ஆண் குழந்தையைக் கொலை செய்து புதைத்த வழக்கில் தாய், தந்தை, பாட்டி ஆகியோரை நேற்று காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 28, 2024

சிவகங்கையின் பெண்வேங்கை வேலுநாச்சியார்!

image

ராணி வேலுநாச்சியார் 18 நூற்றாண்டில், சிவகங்கையின் ராணியாகவும், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப் போராட்ட வீராங்கனையாகவும் இருந்தவர். மேலும் இவர் பல மொழிகளில் புலமை வாய்ந்தும் இருந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக உருது மொழியில் ஹைதர் அலியிடம் பேசி, அவரின் உதவியுடன் சோழவந்தான், சிலைமான், திருப்புவனம், முத்தனேந்தல் நகரங்களை வென்றார். 1746இல் பிறந்த வேலுநாச்சியார் 1796 இல் இறந்தார்.

News May 27, 2024

சிவகங்கை: ஆதிதிராவிடர் விடுதி நிதியில் முறைகேடு

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு சோப்பு, தேங்காய் எண்ணெய் வாங்கி கொள்ள மாதம் தோறும் வழங்கும் தொகை பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் ரூ.9 லட்சம் கையாடல் செய்ததாக, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலக உதவியாளர் மீது 2023 அக்டோபரில் வழக்கு பதிந்தனர்.

News May 27, 2024

சிவகங்கையில் முக்கிய அறிவிப்பு!

image

சிவகங்கை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் மகளிர் விடுதிகள், இல்லங்கள், காப்பகங்கள் நடத்துபவர்கள் அனைவரும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014ன்படி பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். http://tnswp.comஎன்ற இணையதளத்தில் பதிவை மேற்கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தரப்பில் நேற்று(மே.26) தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 27, 2024

தேவகோட்டை அருகே விபத்தில் இருவர் பலி!

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் எழுவங்கோட்டை செல்லும் சாலையை கடக்க முயன்ற பனந்தோப்பு சபரிமுத்து என்பவர் மீது வாகன மோதி உயிரிழந்தார். அதேபோல் நல்லாங்குடி விளக்கு அருகே மாவிடுத்திகோட்டையை சேர்ந்த குப்புசாமி என்பவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவரும் சம்பவ இடத்தில் பலியானார். சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 26, 2024

8215 பேருக்கு ரூ.4.78 கோடியில் மருத்துவ சிகிச்சை

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலம் 8, 215 பேர்களுக்கு ரூ.4.78 கோடி மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இம்மாவட்டத்தில் 10 லட்சத்து 68 ஆயிரத்து 446 பேர் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டம் மூலம் 8, 215 பேர்களுக்கு ரூ.4 கோடியே 78 லட்சத்து 66 ஆயிரத்து 704 மதிப்பிலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

News May 26, 2024

 மஞ்சுவிரட்டில் 5 பேர் காயம் 

image

கல்லல் அருகே உள்ள செம்பனுார் சேவுகப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 மாடுகள் கலந்து கொண்டன. 153 வீரர்கள்
காளைகளை அடக்க களமிறங்கினர். இதில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.