India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கையில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில் 117 டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் மிக குறைவான அளவில் டாக்டர்கள் உள்ளனர். காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் 17 பேர் மட்டுமே உள்ளனர். 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் மாவட்டத்தில் 117 டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் 62 பேர் உள்ளனர். 55 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில், ”மருந்துகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்” என அறிவித்தார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது
சோழபுரத்தில் உள்ள கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக பூசாரியாக பெரியசாமி (70) பணியாற்றி வருகிறார். இவர் கோயிலில் யாரும் இல்லாத நேரங்களில் அப்பகுதி சிறுவர், சிறுமிகளை சன்னதியை சுத்தப்படுத்துவதற்காக தனியாக அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் நிலையில், சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் நேற்று(நவ.21) மாலை அவரை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களது உரிமத்தினை விட்டுக்கொடுக்கலாம். அவ்வாறாக, தங்களது உரிமத்தினை விட்டுக்கொடுக்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்ட வலைதளமான www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் வாயிலாக தங்களது உரிமத்தினை விட்டுக்கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.
சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஆடியோ மூலம் அறிவித்துள்ள இந்த பதிவில், சாலைகளில், தெருக்களில், வயல் வழிகளில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆடு மாடு போன்ற கால்நடைகளை மின்சார கம்பத்தில் கட்ட வேண்டாம் எனவும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழக முதல்வரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு தகுதியின் அடிப்படையில் https://award.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வரும் 15.12.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (நவ.21) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (நவ.21) காலதாமதமாக வந்த மாணவிகளுக்கு அபராதம் விதித்த ஆசிரியர்களை தாக்க மர்ம கும்பல் முயற்சித்துள்ளனர். மேலும் பள்ளிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஆசிரியர்களை திடீரென தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம கும்பலைக் கண்டு மாணவர்கள் ஓட்டம் பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே சிறுவர், சிறுமியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோவில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் நலக்குழு அளித்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பெரியசாமியை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும், சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பது குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என சிவகங்கை நகராட்சி, மாவட்ட ஆட்சியர், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்தில் பதில் அளிக்காவிட்டால், அதிக அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டாக் கட்டியில் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு மின் விநியோகம் இல்லை. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், எஸ்.வி. மங்கலம் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் மின் மாற்றியை ஆய்வு செய்தபோது, அதிலிருந்து 110 கிலோ காப்பர் கம்பிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.