India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம்- 2025 பணியின் மேற்பார்வையாளர் & புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனீஸ் சாப்ரா இன்று(நவ.23) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முகாம்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில்அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையினை www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் வாயிலாக பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். எனமாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன் வைரவபுரத்தை சேர்ந்தவர் ஆர்.பத்மாவதி இன்று(நவ.23) உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அழகப்பா பல்கலையில் உதவி பதிவாளர் பணிபுரிந்த இவருக்கு ஓய்வு பெற்று ஒன்றரை ஆண்டு முடிந்தும், ஓய்வூதிய (பணம்)பலன்களை வழங்கவில்லை என ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் எந்த பலனும் இல்லாததால் அவரை இதனை முயற்சித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம், அன்றை தினத்திற்கு பதிலாக இன்று நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை, ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் இன்று காலை 11 மணியளவில் நடக்க உள்ளது. ஊராட்சியின் வரவு, செலவு உட்பட பல்வேறு கூட்டப்பொருளில் விவாதிக்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. நிலை அலுவலர்கள் மூலமாக நேரடியாகவோ அல்லது https://elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் வட கிழக்கு மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள (TNPSC GROUP II & IIA Mains) இலவசப் பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 10.10.2024 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் <
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவ.29 அன்று முற்பகல் 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.22) தெரிவித்துள்ளார்.
காரைக்குடி விமான நிலையத்தை மீண்டும் திறக்கக் கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கானாடுகாத்தான் விமான நிலைய ஓடுபாதையை சீரமைத்து விமானம் இயக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கொள்கை ரீதியாக முடிவெடுக்கப்படாத நிலையில் மறுசீரமைப்பு குறித்து கேள்வி எழாது என கோர்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நேற்றும், இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியத்தேர்தல் ஆணையம், நவ.23, 24 ஆகிய வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மக்கள் தங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாமில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.