India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்கம்புணரி காவல் நிலையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ஒன்று சிவகங்கை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அப்போதைய காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவரும், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றுபவருமான சிங்காரவேலன் தொடர்ந்து மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், சிவகங்கை மகிளா நீதிமன்ற நீதிபதி அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டத்தின் படி, அடையாளப்படுத்தப்பட்டுள்ள 32 வழித்தடங்கள் தவிர மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகள் இருக்கும் பட்சத்தில், உரிய ஆவணங்களுடன் வருகிற 26.02.2025 ஆம் தேதிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் முன்மொழிவிற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டத்தின் படி, அடையாளப்படுத்தப்பட்டுள்ள 32 வழித்தடங்கள் தவிர மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகள் இருக்கும் பட்சத்தில், உரிய ஆவணங்களுடன் வருகிற 26.02.2025 ஆம் தேதிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் முன்மொழிவிற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி 100 அடி சாலையில் தனியார் பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பேக்கரியில் இன்று (பிப்.14) காதலர் தினத்தினை முன்னிட்டு காதலர்களுக்கு ரோஜாப்பூ வழங்கும் சிறப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் சிலர் தாலிக்கயிறுடன் அந்த பேக்கரி முன் எதிர்ப்பு தெரிவிக்க வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சிவகங்கைமாவட்டத்தில் மட்டும் 30 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, மேலப்பிடவூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனை சாதிவெறி பிடித்த 3 நபர்கள் அவரது இரு கைகளையும் வெட்டியதோடு மட்டுமல்லாமல் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளார்கள். கல்லூரி மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, காரைக்குடி, காளாப்பூர் துணைமின் நிலைய பகுதிகளில் நாளை(பிப்.15) மாதாந்திர மின் பாரமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை பாஜகவின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் பிப்.17ஆம் தேதி மாலை 4 மணிக்கு அரண்மனை வாசல் எதிரில் மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமையிலும், Ex மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. S.G.சூர்யா மாநில செயலாளர், சதீஸ்குமார் மாநில செயலாளர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட தலைவர் பாண்டித்துரை அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி காலிபணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் நாளை(பிப்.14). <
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடக்க இருப்பதாக தகவல் தெரியவந்தால், குழந்தைகள் உதவி எண் 1098 மற்றும் பெண்கள் உதவி எண் 181 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடமும் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.