India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர், உடையார்புரம் பகுதியில் வசந்தா என்பவரின் வீட்டில் கடந்த 14 ஆம் தேதி மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற நிலையில் அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் சிவகங்கையைச் சேர்ந்த சண்முகநாதன்(27), மணிக்காளை(29), விருதுநகரை சேர்ந்த அழகுபாண்டி(24) உள்ளிட்ட 5 பேரை மதுரை அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் 2024-25ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளமான https://www.tnpcb.gov.in ஏப்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்றையதினம் (20.02.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்தார். அதில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, உணவு அருந்தி ஆய்வு மேற்கொண்டார்.
இளையான்குடி அருகே பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு சென்ற அக்காள், தங்கைகளான சோபிதா, கிறிஸ்மிகா கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆசிரியை சிவமேரி மாணவிகளை கவனிக்க தவறியதாக ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்துள்ளார். மேலும் அங்கன்வாடி பணியாளர் திணேஷாஅம்மாள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலைக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இங்குள்ள திருக்கொடுங்குன்றநாதரை வழிபட்டால் துன்பம் நீங்கும் என நம்பப்படுகிறது. இங்கு பேர் இல்லா மரம், பேரா மலை, மும்முனை மதில்,மூன்று திருத்தளங்கள்,ஆறுகால் மண்டபம், உறங்காவல்லி பூஜை, உரங்கா புளி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த இடமாக இந்த மலை உள்ளது. பாரி மன்னன் ஆட்சி செய்த பகுதி என்பதால் பரம்பு மலை என்றும் அழைக்கப்படுகிறது.Share It.
இளையான்குடி ஆழிமதுரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயின்று வந்த சிறுமி சோபியா (8) மற்றும் அங்கன்வாடி மையத்தில் படித்து வந்த சிறுமி கிருஷ்மிகா (4) ஆகிய இருவரும் இன்று (பிப்.19) பள்ளியின் எதிர்புறம் உள்ள கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படவுள்ளது. இவ்விருதினை பெற (http://sivaganga..nic.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்ட தனி நபர் இல்லங்களில் சிறப்பாக பராமரிக்கப்படும் நூலகத்திற்கு சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்பட உள்ளது. உரிய விபரங்களுடன் வருகின்ற பிப்.25 ஆம் தேதிக்குள் dlosivagangai01@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலுவலகம், 133-D மஜீத்ரோடு சிவகங்கை-630561 என்ற முகவரியில் விண்ணப்பித்திடலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சுந்தரர் ஒரு முறை காளையார்கோவில் எல்லைக்குள் வந்தவுடன் கோவிலுக்கு செல்லும் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் நடக்க தயங்கிய சுந்தரர் மனம் வருந்திப் பாடினார். அப்போது சிவபெருமான் ஒரு காளையை அனுப்பி காளை கால் பதித்த இடங்களில் லிங்கம் இல்லை என அசரீரி ஒலிக்க சுந்தரர் அவ்வழியில் சென்று தரிசனம் செய்தார். காளை வழிகாட்டிய தலம் என்பதால் காளையார்கோவில் என பெயர் பெற்றது. Share It.
தேவகோட்டை அழகாபுரியை சேர்ந்த அலெக்சாண்டர் கல்வி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி +2 மாணவர்களை குறைந்த கட்டணத்தில் இஞ்ஜினியர் கல்லூரியில் சேர்த்து விடுவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.10000 வரை பெற்று சில மானவர்களின் அசல் சான்றிதழைகொடுக்காமால் தலைமறைவாகியுள்ளார்.இதுகுறித்து அளித்த புகாரின் படி அலெக்சாண்டரை கைது செய்து விசாரித்ததில் அவர் 52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.