India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 நிலையில் உள்ள 2,327 காலிபணியிடத்திற்கான முதல்நிலை எழுத்து தேர்வினை சிவகங்கையில் செப்.14 அன்று 43 மையங்களில் 13,260 பேர் எழுத உள்ளனர். குரூப் 2 தேர்வினை எழுத சிவகங்கை மாவட்டத்தில் 13,260 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கென சிவகங்கையில் 22, காரைக்குடியில் 16, தேவகோட்டையில் 5 மையங்கள் என 43 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
2024-25ஆம் ஆண்டிற்கு, சிவகங்கை மாவட்ட அளவில்
பள்ளிகளில் 1 -12ஆம் வகுப்பு முடிய பயின்று வரும் மாணாக்கர்கள் திருக்குறள் முற்றோதலில் பங்குபெறுவதற்கான விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் ஆயத்த கூட்டம் சார்பில் செப் – 10 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதில், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார பகுதிகளில் உள்ள டிட்டோ ஜாக் நிர்வாகிகள் உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விளையாட்டுத் துறையில் சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் ரூ.6,000 மாத ஓய்வூதியம் பெற தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரா்கள் வரும் 30ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் கலைக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிணி அறிவியல் ஆகிய துறைகளில் முதுநிலை படிப்புகள் உள்ளன. 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் நிரப்பப்படாத இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 10ஆம் தேதி நடைபெற உள்ளது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழ்ப்பசலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பீரவின் என்ற இளைஞர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இதில் தொடர்புடைய சசிக்குமார், தனுஷ், அமர்நாத், ரகுபதி, சுதர்சன் ஆகிய 5 பேரை மானாமதுரை துணை கண்காணிப்பாளர் நிரேஷ் மேற்பார்வையில் தனிப்படை காவல்துறையினர் இன்று(செப்.04) கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில்
பசுமை தொழில் முனைவோர்கள் “பசுமை தொழில் முனைவு திட்டத்தின்” கீழ் பயன் பெறும் வகையில் வரும் 9ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை
தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (செப்.4) தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்க கல்வித் துறையில் ராஜ்குமார், வெற்றிவேந்தன், லட்சுமி, அமுதா ஆகிய நான்கு பேரும், பள்ளிக் கல்வித் துறையில் ஜோசப் கமலாராணி, ஜாய்சிமேரி, வணிதா, முத்துக்குமார் ஆகிய நான்கு பேரும் நாளை சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருது வாங்கவுள்ளனர்.
காளையார்கோவில் காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கின் எதிரிகளான மதன்(21), முத்துப்பாண்டி(20), செல்வகுமார்(28), மணிகண்டபிரபு(22) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ் ஒப்புதலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அவர்கள் மீது தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறவுள்ள
இமானுவேல் சேகரன் 67வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு வரும் 11ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திலுள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (செப்.3) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.