Sivagangai

News February 5, 2025

சிவகங்கை: பக்தர்கள் பாதுகாப்புக்காக ‘reflect sticker’

image

சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக, சாலை வழியாக பழனி செல்லும் பக்தர்களின் பயணம் பாதுகாப்பாக அமைய இன்று(பிப்.05) ‘reflect sticker’ ஒட்டப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் அருளானந்து, மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், தென் மண்டல இளைஞரணி துணை செயலாளர் அலெக்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News February 5, 2025

சீர்மிகு ரயில்வே ஸ்டேஷனாக மாறுமா சிவகங்கை?

image

சிவகங்கை ரயில் நிலைய பழைய ரிசர்வேஷன் கவுண்டர், பயணிகள் தங்கும் அறை, தேசிய வங்கி ஏ.டி.எம்., மையக் கட்டடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. பயன்பாட்டில் இல்லாத கட்டடங்களை அகற்றி, ரயில்வே ஸ்டேஷனை சுற்றி காம்பவுண்ட் அமைத்து பாதுகாக்குமாறு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.,சிங்., ஆய்வின்போது தெரிவித்து சென்றார். ஆனால், தற்போது வரை பழைய கட்டடங்களை அகற்ற ரயில்வே அதிகாரிகள் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

News February 5, 2025

விற்பனையாகாத பொங்கல் மளிகை தொகுப்பு –  அறிவிப்பு

image

சிவகங்கை ரேசன் கடைகளுக்கு முக்கிய அறிவுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. விற்பனையாகாத, பொங்கல் மளிகை தொகுப்பில் உள்ள பொருட்களை தனித்தனியே கார்டுதாரர்களிடம் விற்குமாறும், உரிய பணத்தை முன்கூட்டியே செலுத்துமாறும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் தொகுப்பை வாங்க பலரும் ஆர்வம் காட்டாத நிலையில் அதை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News February 5, 2025

மானாமதுரை: அரசுப் பள்ளியில் சாதி பார்க்கும் ஆசிரியை?

image

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பிடாவூர் அரசுப் பள்ளியில் 6 மாதமாக பெண் ஆசிரியை ஒருவர் சாதி ரீதியாகவும், மற்ற பிற காரணங்களை கூறியும் மோதலில் ஈடுபடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் 2 ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மேலாண் குழு தலைவர் கீதா, முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

News February 5, 2025

டூவீலர்கள் பொது ஏலம் – எஸ்பி தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு, குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்ட 17 இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 17 இரு சக்கர வாகனங்கள் ஏலம் பிப்.18 அன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 4, 2025

ஈரோடு தேர்தல் – விடுமுறை அளிக்காவிடில் புகார் 

image

சிவகங்கை மாவட்டத்தில் பணி புரியும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம் 04575-240521 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News February 4, 2025

அரசு உதவித்தொகை பெற.. ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணாக்கர்கள், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASAVI Postmatric Scholarship) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News February 4, 2025

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் கார் டிராபிக்கில் சிக்கியது

image

சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளராக புதிதாக பொறுப்பேற்று கழக நிர்வாகிகளை சந்திக்க வருகை புரிந்த மா.செயலாளர் ஜோசப் தங்கராஜ்க்கு திருப்புத்தூர் ஒன்றிய நகர கட்சியின் சார்பில் இன்று (பிப்.04) வரவேற்பு செலுத்திக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் கார் எதிர்பாராத விதமாக டிராபிக்கில் மாட்டிக் சிக்கிக் கொண்டது. உடனே டிராபிக் போலீசார் கூட்டத்தை சரி செய்து அமைச்சரை அனுப்பி வைத்தனர்.

News February 4, 2025

சிவகங்கையில் பிப்.21 முதல் புத்தகத் திருவிழா தொடக்கம் 

image

சிவகங்கை மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்ற புத்தக திருவிழா, இந்தாண்டும் 2025ம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா, பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களின் பல்வேறு தலைப்புகளிலுமான இலட்சக்கணக்கிலான புத்தகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் நடைபெற உள்ளது.

News February 3, 2025

பொதுமக்களுடன் உணவருந்திய அமைச்சர் 

image

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (பிப்.3) இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். உடன் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

error: Content is protected !!