Sivagangai

News February 7, 2025

கொத்தடிமைத் தொழிலாளர்கள் தகவல் தெரிவிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணியாற்றுவது தெரிய வந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் ஆா்.சுப்பையா தெரிவித்தாா்.கொத்தடிமைத் தொழிலாளா் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை மாற்ற அனைவரது ஒத்துழைப்பும் தேவை. கொத்தடிமைத் தொழிலாளர் பணியில் இருப்பது கண்டறிப்பட்டால் தொழிலாளர் நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News February 6, 2025

பிப்.8ல் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் பிப்.8 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News February 6, 2025

தொழிற்பள்ளிகளுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள்/தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 28.02.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News February 6, 2025

காவல் துறையால் கைப்பற்றப்பட்ட டூ வீலர்கள் ஏலம்

image

சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 17 டூவீலர்கள் பிப்.18 காலை 10:00 மணிக்கு சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தலைமையில் நடைபெற உள்ளது.விரும்புவர்கள் பொது ஏலம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆதார் அட்டை நகலுடன் கூடுதல் எஸ்.பி., மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

News February 6, 2025

பிரேக் பிடிக்காத பஸ்ஸை கட்டையை போட்டு நிறுத்தினர்

image

சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மதியம் அரசு டவுன் பஸ் 15க்கும் மேற்பட்ட பயணிகளோடு மேலூர் புறப்பட்ட போது நான்கு ரோடு சந்திப்பில் பிரேக் பிடிக்காததை ஓட்டுநர் கண்டக்டரிடம் தெரிவித்தார். உடனே கண்டக்டர் பஸ்சிலிருந்து குதித்து காப்பாற்றுங்கள் என்று கத்திக் கொண்டே ஓடினார். சத்தம் கேட்ட அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் நந்தபாலன் தனது தந்தையுடன் ஓடி கட்டையை போட்டு நிறுத்தினர்.

News February 6, 2025

வி.சி.க., நிர்வாகி தாக்கியதாக பெண் எஸ்.ஐ., புகார்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் பிரணிதா. நேற்றிரவு அங்கு பிரச்னை தொடர்பாக புகார் மனு அளிப்பதற்காக வி.சி.க., வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் வந்திருந்தார். அவர் எஸ்.ஐ., பிரணிதாவிடம் வாக்குவாதம் செய்து பின் தகராறாக மாறி எஸ்.ஐ., தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது.

News February 5, 2025

சாலை போக்குவரத்து சேவை வழங்க நடவடிக்கை

image

சிவகங்கை மாவட்டம் மினி புதிய விரிவான திட்டம் 2024 மற்றும் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டத்தின் படி, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (பிப்.05) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 5, 2025

திருமணமான 5 மாதத்தில் பெண் துாக்கிட்டு தற்கொலை

image

காளையார்கோவில் அருகே அரசகுளத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்-சத்தியா (25). இவர்களுக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மணிகண்டன் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது சத்தியா தூக்கிட்ட நிலையில் இருந்தார். அதிர்ச்சியடைந்த மணிகண்டன் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சத்தியா உடலை சிவகங்கை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

News February 5, 2025

கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது

image

கிளாதரி தோட்டக்கலை பகுதியில் கிராவல் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் பூவந்தி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக சுரேஷ்குமார், துரைசாமி, முனீஸ்வரன் ஆகியோர் கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்ட நிலையில் போலீசார் முனீஸ்வரனை கைது செய்து ஜேசிபி, லாரி, 2 யூனிட் கிராவல் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்து மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து மற்ற இருவர் குறித்து விசாரிக்கின்றனர்.

News February 5, 2025

பொதுத்தேர்வு: சிவகங்கை மாவட்ட அதிகாரி நியமனம்

image

தமிழகம் முழுவதும் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வரும் நிலையில், சிவகங்கை கண்காணிப்பு அதிகாரியாக தனியார் பள்ளிகள் இயக்கம் இணை இயக்குநர் ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!