India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவக்க வலியுறுத்தியும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பிப்.13ல் அனைத்து மண்டல அலுவலகங்கள் முன்பு வாயிற்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக நேற்று சென்னையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மண்டல செயலாளர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் MPHW, Lab Technician ஆகிய 9 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.23,000 வரை சம்பளம் கிடைக்கும். 8th, B.Sc, Diploma, DMLT, ITI படித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். . விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2025. *ஷேர்
பிப்-09, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தேவதண்டதாவு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பம் வீட்டிலிருந்த இவர் பிப்.3ல் மாயமானார்.உறவினர்கள் புகாரில் தேவகோட்டை தாலுகா போலீசார் அவரை தேடி வந்தனர்.நேற்று வந்தனர்.நேற்று அருகே கட்டவிளாகம் கண்மாய்க்குள் புஷ்பம் இறந்து கிடந்தார்அந்தப்பக்கமாக சென்றவர்கள் கிடந்தார்.அந்தப்பக்கமாக உடல் மீட்கப்பட்டு தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பணி நேரத்தில் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என 2021ல் அரசாணை 363ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் யாரும் அணிவதில்லை.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 90 அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில்’வாக்கோ இந்தியா’ சார்பாக 4வது வாக்கோ இந்தியா ஓபன் கிக்பாக்ஸிங் சர்வதேச போட்டி 01/02/25 முதல் 05/02/25 வரை (KD ஜாதவ் இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில்) நடைபெற்றது. இதில் சிவகங்கை கிக் பாக்ஸிங் வீரர்கள் 5 பேர் இந்தியா சார்பாக களம் இறங்கினர். இடையமேலூர் பள்ளி மாணவர்கள் செந்தில்வேலன், விஸ்வகிறீஷ்இரண்டாவது சர்வதேச சாதனை படைத்தனர்.
மானாமதுரையை சேர்ந்த கோட்டையம்மாள் உட்பட 2 பேர் SBI-யில் 116 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அடகு வைக்க வந்தனர். நகைகளை பரிசோதித்த போது தங்கத்தின் தரம் குறைந்திருப்பது தெரிந்தது. இது வரை ரூ. 36.37 லட்சத்திற்கு நகைகளை அடகு வைத்துள்ளார். அவற்றையும் பரிசோதித்த போது தரம் குன்றியிருந்தது. வங்கி மேலாளர் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் தாய், மகள் உட்பட மூவரரும் கைதானர்கள்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிப்.10 அன்று குடற்புழு நீக்கம் மாத்திரை (அல்பெண்டசோல்) இலவசமாக வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது. விடுபட்டவர்களுக்கான Mop up Day வருகின்ற 17.02.2025 அன்றும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சோமநாதபுரம் காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ. பிரணிதா தாக்கப்பட்டார். விசிக மாவட்டச் செயலாளர் இளைய கௌதமன் பிரணிதாவை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். காவலர்களுக்கு காவல் நிலையத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அரிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWSல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 9791338296 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது WHATS APPல் மெசேஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <
சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச உதவி உபகரணங்கள் அளவீடு மற்றும் மதிப்பீட்டு முகாம் சென்னை ஃபிரீடம் டிரஸ்ட் மூலம் (15-02-2025) நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிவகங்கை ஃபிரீடம் டிரஸ்ட் ஹாலில் நடைபெறும். மாற்றுத் திறனாளிகளுக்கு இது ஒரு நல்ல அரிய வாய்ப்பு. 14-02-2025 தேதிக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.