India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று(செப்.14) நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் தொகுதி-II A) தேர்வினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் 2024-2025ம் ஆண்டில் இதுவரை 47 குழந்தை திருமணம் நடந்துள்ளது. 18க்கு உட்பட்ட சிறுமிகள் 23 பேரும், 2022-2023ம் ஆண்டில் 33 சிறுமிகளும் கர்ப்பம் அடைந்துள்ளனர். 2022-23ல் 80 பேருக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. அதே போன்று 2023-2024ல் 73 சிறுமிகள் கர்ப்பம் அடைந்தும், 55 குழந்தை திருமணம் நடந்துள்ளது. கடந்த 2 ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு குறைந்துள்ளது.
சிவகங்கை மருதுபாண்டியர் நகர் சாலையைச் சேர்ந்தவர் ராமு. நகராட்சி பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் காளீஸ்வரன்(33) அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பயின்றார். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்ட சுற்றுலா அலுவலராக நியமிக்கப்பட உள்ளார். அவரை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.
சிவகங்கையில் உள்ள அனைத்து அரசு, தனியார் மகப்பேறு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த பிரசவத்தில், 2024-2025ம் ஆண்டில் இதுவரை 4,787 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் பிரசவ கால பெண்களின் இறப்பு எண்ணிக்கை 4ஆக உள்ளது. அதே நேரம் 2022-2023ம் ஆண்டில் 16,667 குழந்தைகள் பிறந்ததில், 7 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர். 2023-2024ம் ஆண்டில் 16,210 குழந்தைகள் பிறந்த நிலையில், 8 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2022- 2023 ம் ஆண்டில் எடை குறைவாக பிறந்த குழந்தைகள் சதவீதம் 12.2 ஆக இருந்தது. குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்ந்து காணப் பட்டது. 2023–2024ம் ஆண்டில் எடை குறைவாக பிறந்த குழந்தை சதவீதம் 8.9 ஆக இருந்த நிலையில், பிரசவ நேர, 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு 152 ஆக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
கீழடி 10ம் கட்ட அகழாய்வில் இரண்டு அடி உயரத்தில் அடர் சிவப்பு நிற பானை கண்டறியப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு நடந்து வரும் இடத்தின் அருகே ஏழாம் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டு அதில் இதே போன்ற சிவப்பு நிற கொள்கலன் கண்டறியப்பட்டது. கீழடி அகழாய்வில் தொடர்ச்சியாக கிடைத்து வரும் அடர் சிவப்பு நிற பானைகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்ட வழக்கறிஞா்கள் சங்கத்தின் உறுப்பினா்கள் குமரன், பாலமுருகன் மீது தாக்குதல் நடத்திய திருப்பதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், உடனடியாக வழக்குரைஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வலியுறுத்தியும் நேற்று(செப்.13) தமிழ்நாடு வழக்குரைஞா்கள் கூட்டுக்குழு அறிவித்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.
சென்னையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கடந்த 5ஆம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற 9 ஆசிரியர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விருதுகளை காண்பித்து நேற்று(செப்.13) வாழ்த்து பெற்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைத்திட விதிமுறைகளுக்குட்பட்டு உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பங்கள் மீது அக்.,20க்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (செப்.13) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை குரூப் 2ஏ தேர்வை எழுத மொத்தம் 13ஆயிரத்து 260பேர் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 இடங்களில் சிவகங்கையில் 22, தேவகோட்டையில் 5, காரைக்குடியில் 16 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 14 நடமாடும் குழுக்கள், 5 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.