India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘செல்போன் வைத்திருக்கும் அனைவரும் செய்தியாளர்களாகிவிட்டனர்; வரைமுறையின்றி செயல்படும் யூடியூப் சேனல்களை மத்திய அரசு வரைமுறைப்படுத்த கருத்து கேட்டுள்ளது; யூடியூப் நடத்துவோருக்கும் சமுதாயக் கடமை உண்டு; உத்தராகண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; சிறு நகரங்களிலும் தனியார் எஃப்எம் ரேடியோ நடத்த அலைவரிசை வழங்கப்பட்டு வருகிறது” என சிவகங்கையில் எல்.முருகன் கூறினார்.
வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருக்கும் 1,05,002 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதிக்காக, நொடிக்கு 1130 கனஅடி நீர் திறக்கப்பத்துள்ளது. வைகை அணைக்கு நொடிக்கு 561 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், நொடிக்கு 1130 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இளங்கலை மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி முதல் 21 வரை வினாடி வினா போட்டி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. போட்டியானது நான்கு நிலைகளில் நடைபெறவுள்ளது. நாடு தழுவிய ஆன்லைன் போட்டியில் மாணவர்கள் இருவர் கொண்ட குழுக்களாக பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சிய ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை ஆய்வு செய்ய மத்திய தகவல்&ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் வேல்முருகன் இன்று (செப்.15) சிவகங்கை வருகை புரிகிறார். சிவகங்கை மாவட்ட பாஜக தலைவரான மேப்பல் சக்தி அவர்களின் சொந்த ஊரான மேப்பல் கிராமத்தில் மேற்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சி முடித்து அமைச்சர் மேலூரில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நேற்று (செப்.14) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,207 வழக்குகளுக்கு 5 கோடியே 95 லட்சத்து 36 ஆயிரத்து 534 ரூபாய்க்கு தீா்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.
மிலாடிநபி தினத்தை முன்னிட்டு செப்.17 அன்று டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உள்ளிட்ட மதுக்கூடங்களை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபானகடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A, FL3AA உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் மிலாடி நபி தினத்தில் முழுவதுமாக மூடப்படும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
பெரியாறு பாசனப்பகுதியாகிய 85,563 ஏக்கர் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் பாசன பரப்பு 19,439 ஏக்கர் என 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும்,75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான ஆணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிவகங்கை மாவட்ட விவசாயிகளும் பயன்பெறுவர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தேங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் தேங்காய் உற்பத்தி குறைவானதால் அங்கு தேங்காய் விலை அதிகரித்து விட்டது. இதன் காரணமாக திருப்புவனத்திற்கு வந்து ஆந்திர வியாபாரிகள் தேங்காயை ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் ரூ.28 விற்ற தேங்காய் தற்போதைய ரூ.40 விற்பனையாகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு இன்று நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 13200 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் சிவகங்கையில் 4783 பேர், தேவகோட்டையில் 1187 பேர், காரைக்குடியில் 3760 பேர் என மொத்தம் 9730 பேர் தேர்வு எழுதினர். மேலும் விண்ணப்பித்திருந்த 3470 பேர் தேர்வு எழுதவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் காப்பீடு திட்ட வருவாய் ஈட்டியுள்ளனர். இத்திட்டம் மூலம் ஆப்பரேஷன், பிளாஸ்டிக் சர்ஜரி, புற்றுநோய் சிகிச்சை, டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சை மூலம் 4,625 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.