Sivagangai

News February 16, 2025

சிவகங்கை: 12 ஆம் வகுப்பு மாணவன் கார் மோதியதில் பலி

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சாலையில் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சுதர்சனன் எதிரே வந்த கார் மோதியதில் மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த தீபக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடி போலீசார் சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

News February 16, 2025

கண்ணமங்கல கண்மாயில் மீன்பிடித் திருவிழா

image

வகுத்தெழுவன்பட்டி கண்ணமங்கல கண்மாயில் தண்ணீர் வற்றியதால் தண்ணீர் மீண்டும் நிரம்பி முழுமை பெற வருண பகவானை வேண்டும் விதமாக மழை வரம் வேண்டி நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது கண்மாய் கரையில் நின்று ஊர் பெரியவர்கள் வெள்ளை வீச அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.இதில் கெழுத்தி, கட்லா உள்பட போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

News February 15, 2025

கம்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள கணினி இயக்குபவர் (Computer Operator) பணியிடத்திற்கு முற்றிலுமாக தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிட சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் தங்களது வசிப்பிட தாலுகாவிற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் மாதிரி விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து வரும் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News February 15, 2025

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது 

image

சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (25). திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்தி கணேஷ் (19) கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் நேற்று அடைத்தனர்.

News February 15, 2025

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா

image

காரைக்குடி அழகப்ப பல்கலைக்கழகம் தமிழ் பண்பாட்டு மையம் வீறுகவியரசர் முடியரசனார் அவைக்காலம் இணைந்து வெள்ளிவிழா நூல் வெளியீட்டு விழா மற்றும் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நூலினை வெளியிட்டார்.உடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத், முன்னாள் அமைச்சர் தென்னவன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட்ட பலர் பங்கேற்றனர்.

News February 15, 2025

திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

image

சிவகங்கை தாகியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த மாதம் இருபதாம் தேதி தன்னுடைய உறவினரான ராஜுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது முன்விரோதம் காரணமாக சிவகங்கை திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (25) என்பவர் அறிவாளால் வெட்டினார். இந்த வழக்குத் தொடர்புடைய மாரிமுத்துவை எஸ்பி பரிந்துரையின் படி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

News February 15, 2025

டி.எஸ்.பிக்கு பிடிவாரண்ட் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவு

image

சிங்கம்புணரி காவல் நிலையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ஒன்று சிவகங்கை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அப்போதைய காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவரும், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றுபவருமான சிங்காரவேலன் தொடர்ந்து மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், சிவகங்கை மகிளா நீதிமன்ற நீதிபதி அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளார்.

News February 15, 2025

மினி பேருந்துகள் இயக்குவது குறித்து ஆட்சியர் அறிக்கை

image

சிவகங்கை மாவட்டத்தில் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டத்தின் படி, அடையாளப்படுத்தப்பட்டுள்ள 32 வழித்தடங்கள் தவிர மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகள் இருக்கும் பட்சத்தில், உரிய ஆவணங்களுடன் வருகிற 26.02.2025 ஆம் தேதிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் முன்மொழிவிற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News February 15, 2025

மினி பேருந்துகள் இயக்குவது குறித்து ஆட்சியர் அறிக்கை

image

சிவகங்கை மாவட்டத்தில் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டத்தின் படி, அடையாளப்படுத்தப்பட்டுள்ள 32 வழித்தடங்கள் தவிர மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகள் இருக்கும் பட்சத்தில், உரிய ஆவணங்களுடன் வருகிற 26.02.2025 ஆம் தேதிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் முன்மொழிவிற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

ரோஜாப்பூ ஆஃபர் அறிவித்த பேக்கரி – எதிர்த்த இ.முன்னணி

image

காரைக்குடி 100 அடி சாலையில் தனியார் பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பேக்கரியில் இன்று (பிப்.14) காதலர் தினத்தினை முன்னிட்டு காதலர்களுக்கு ரோஜாப்பூ வழங்கும் சிறப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் சிலர் தாலிக்கயிறுடன் அந்த பேக்கரி முன் எதிர்ப்பு தெரிவிக்க வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!