India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின்(டாம்கோ)தலைவர் சி.பெர்ணான்டஸ் ரத்தின ராஜா தலைமையில் திட்டசெயல்பாடுகள் குறித்து நாளை மறுநாள் (செப்.25) ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், சிறுபான்மையின மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் கண்மாயில் ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெளி மாநிலம் & ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வரத் தொடங்கின. பறவைகள் இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து தங்கள் குஞ்சுகளுடன் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருப்பிடங்களுக்கு சென்றுவிடும். இதனால் இப்பகுதி கிராம மக்கள் 52 ஆண்டுகளாக தீபாவளி மற்றும் திருவிழாவுக்கு பட்டாசு வெடிப்பதில்லை.
சிவகங்கை மாவட்டம் சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை (செப்.24) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட ஊர்களில் மானாமதுரை,சிப்காட், ராஜகம்பீரம், கட்டிக்குளம், மிளகனூா், முத்தனேந்தல், தெ. புதுக்கோட்டை, கீழப்பசலை,சங்கமங்கலம், குறிச்சி,முனைவென்றி, கச்சாத்தநல்லூா், நல்லாண்டிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயர் பொறியாளர் அறிவித்துள்ளார்
முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர் சார்ந்தோர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.25 அன்று நடைபெற உள்ளது. இதில் சிறுதொழில் செய்து முன்னேற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 27.09.2024 அன்று முற்பகல் 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த அழகுசுந்தரம் மகன் பழனிமுருகன் (30). இவா் பிச்சைப் பிள்ளையேந்தல் பகுதியில் நேற்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பாச்சேத்தி போலீஸாா் அவரின் உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்காக கடந்த 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏவின் சகோதரரும், சிவகங்கை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் நாகாடி ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சகோதரரை இழந்து வாடும் செந்தில்நாதன் மற்றும் முத்தையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பிஸ்மில்லா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக சீத்தூரணி ராமையா மற்றும் திருவுடையார்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் இன்று 25 அடி ஆழத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது மயக்கம் அடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். விஷவாயு தாக்கி இருவரும் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறியதாவது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்டிரிய ராணுவ கல்லூரியில் 2025ம் ஆண்டு ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் 2024 டிசம்பர் 1ல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், சேர எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30 ஆகும்.
Sorry, no posts matched your criteria.