Sivagangai

News September 28, 2024

25 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதன்காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை உள்ளிட்ட 25 மாவட்டங்களின் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 28, 2024

சிவகங்கையில் மகளிர் பயிற்சி பள்ளி ஒதுக்கும் சூழல் இல்லை

image

சிவகங்கையில் வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலர் பயிற்சி கல்லுாரி தொடங்க வேண்டும் என்று எம்பி கார்த்தி தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். 8 இடங்களில் நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகள் உள்ளது. பெண் காவலர்களுக்கு என்று பிரத்யேகமாக புதிய காவலர் பயிற்சி பள்ளி துவங்க வேண்டிய சூழல் இல்லை என கோரிக்கைக்கு கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் பதில் கடிதம் அளித்துள்ளார்.

News September 27, 2024

சிறந்த சுற்றுலாத்தலமாக கீழடி தேர்வு.

image

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று டெல்லியில் நடந்த விழாவில், இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத்தலமாக சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தண்கர் அவர்களிடமிருந்து கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். இந்த விருது கீழடி மக்களுக்கு பெருமைசேர்ப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.

News September 27, 2024

சிவகங்கையில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

image

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் சிவகங்கை நகராட்சி சார்பில் உலக வெறிநோய் தடுப்பு தினம் (செப்-28) முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை சிவகங்கை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமினை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் துவக்கி வைக்க உள்ளார்.

News September 27, 2024

குறைந்த வட்டியில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ், நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன், கிரையத் தொகையினை இந்தியன் ஒவர்சிஸ் வங்கியின் மூலமாக
குறைந்த வட்டியில் கடனாக பெற்று பயன்பெறுவதற்கென விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனை, தகுதியுடையோர் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

மாணவர்களுக்கு சிவகங்கை ஆட்சியர் அறிவுரை

image

உயர்வுக்குப் படி முகாமின் மூலம் சிவகங்கை, சிங்கம்புணரி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் 
நடைபெற்ற முகாமின் அடிப்படையில், மொத்தம் 84 மாணாக்கர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, உயர்கல்வியின் முக்கியத்துவத்தினை மாணாக்கர்கள் கருத்தில் கொண்டு உயர்கல்வி கற்று, தங்களது வாழ்க்கை தர மேம்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா  அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

சிவகங்கையில் 30 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

image

சிவகங்கை மாவட்டம் முழுவதும் நடப்பாண்டு ஆகஸ்ட் வரை குட்கா தடுப்பு நடவடிக்கையாக 2 ஆயிரத்து 513 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு 305 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 30 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 05.10.2024 அன்று சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை நாடுவோர் https://tinyurl.com/svgcandidatereg என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

image

மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிப்காட் காவல் நிலைய எஸ்ஐ ராகார்ஜுனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது செய்களத்தூர் பகுதியைச் சேர்ந்த காமேஷ் (19) சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று (செப்.25) கைது செய்து 66 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News September 25, 2024

காரைக்குடியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

image

திருப்பதி திருமலையில் பிரம்மோதஸவம் திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிரம்மோத்ஸவம் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்காக காரைக்குடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருப்பதிக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் அக்.10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.