Sivagangai

News February 28, 2025

சிவகங்கையில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை

image

தமிழகத்தில் சிவகங்கை உட்பட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ,விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி உட்பட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News February 28, 2025

மினி பேருந்து வைத்திருப்போர் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தில் மினி பேருந்துக்கான அடையாளப்படுத்தப்பட்டுள்ள 42 வழித்தடங்கள் தவிர, மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகள் இருக்கும் பட்சத்தில், உரிய ஆவணங்களுடன் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் முன்மொழிவிற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற 10.03.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News February 27, 2025

பிரான்மலை சேக் ஒளியுள்ள தர்காவுக்கு போனால் இது தீரும்

image

பிரான்மலை சேக் ஒளியுள்ள தர்கா மத முக்கியத்துவம் கொண்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாகும். ஒவ்வொரு வருடமும் மத வேறுபாடுகளின்றி அனைத்து மத சுற்றுலாப் பயணிகளும் இத்தர்காவிற்கு வருகின்றனர். இங்கு வந்து பிரார்த்திப்போரின் அனைத்து வகையான ஆசைகளும் நிறைவேற்றப்படுவதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இங்கு பிரார்த்தித்ததன் மூலம் நல்லதிர்ஷ்டமும், நல்ல உடல் நலமும் கிடைக்கப் பெற்ற உண்மைக் கதைகளை அறியலாம்.Share.

News February 27, 2025

சிவகங்கையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 28.02.25 காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News February 27, 2025

சிவகங்கை: இறையன்பு சிறப்பு சொற்பொழிவு

image

சிவகங்கையில் நான்காம் ஆண்டு புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தகக் கண்காட்சி விழாவில் இன்றைய சிறப்பு நிகழ்வாக மாலை 7 மணி அளவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். இன்றைய விருந்தோம்பல் எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயதில் இருக்க வேண்டும். மாதம் ரூ. 15000 வழங்கப்படும். விரும்புவோர் மார்ச் 5ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். வங்கி வேலையில் சேர விரும்பும் உங்க நண்பர்களுக்கு பகிரவும்.

News February 27, 2025

புதிய அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சேந்தனேந்தல் கிராமத்திலிருந்து பரமக்குடிக்கு புதிய அரசு நகரப் பேருந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், காரைக்குடி மண்டல தொ.மு.ச. பொதுச் செயலா் பச்சைமால், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

News February 26, 2025

தேவகோட்டை சிவன் கோவில் வரலாறு தெரியுமா?

image

உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் நகர சிவன் கோயில் என்று அழைக்கப்படும் தேவகோட்டை சிவன் கோயில் சிவகங்கை மாவட்டத்தின் பிரபல கோயிலாகும். இங்குள்ள கட்டிடக்கலை மிகவும் அற்புதமானது. மேலும், காய்கறி சாய வண்ணப்பூச்சு கலைப் படைப்புகள் துடிப்பானவை. இந்தக் கோயில் சேக்கிழார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு இந்தக் கோயிலுடன் நேரடித் தொடர்பில்லை. இதற்கான வரலாறு தெரிந்தால் Comment-ல் தெரிவிக்கவும். Share.

News February 26, 2025

லாபம் பெறலாம் என்று கூறி பணம் மோசடி

image

தேவகோட்டை ராம் நகரை சேர்ந்த முரளியிடம் செல்போனில் பேசிய ஒருவர் தன்னை பங்குச்சந்தை ஆலோசகர் என்றும், தான் குறிப்பிடும் கம்பெனி ஷேர்களில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியதை நம்பி முரளி ரூ.19 லட்சத்து 41 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பணத்தைப் பெற்று கொண்ட பின்னர் அந்த நபர் எந்த தொடர்பும் கொள்ளாததால் முரளி சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கின்றனர்.

News February 26, 2025

அஞ்சல் துறை சார்பில் விபத்து காப்பீட்டு முகாம்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அஞ்சலகங்களில் இந்தியா அஞ்சல் துறை சார்பில் விபத்து காப்பீட்டு முகாம் தொடங்கி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் வருகின்ற பிப்-28 தேதி வரை காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறும். எனவே 18 முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் இத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என கோட்ட அதிகாரி தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!