Sivagangai

News May 16, 2024

சிவகங்கை: முன்னாள் படை வீரர்கள் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் 12-ம்  வகுப்பில் தேர்ச்சி பெற்று,  நடப்பு  கல்வியாண்டின் இட ஒதுக்கீட்டின் படி, மேற்படிப்பில்  சேருவதற்கான சான்று தேவைப்படுவோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது  exwelsvg@tn.gov.in என்ற  இணையதள முகவரியில்  விண்ணப்பித்து  பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட  ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

சிவகங்கை மழை அளவு விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று(மே 15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிங்கம்புணரியில் 14 செ.மீட்டரும், திருப்புவனம் பகுதியில் 2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கோடை தொடங்கியது முதல் ஆங்காங்கே கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

சிவகங்கை: கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையே 14 வயதுக்கு உபட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு, சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் தோ்வு மே 19 ஆம் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி ’ஆ’ வலைப் பயிற்சி மைதானத்தில், அன்றைய தினம் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

சிவகங்கை: ஆழ்குழாய் மூலம் தண்ணீர் சேமிப்பு

image

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே காட்டாம்பூர் ஊராட்சியில் கோடையில் ஊரணிகள் வற்றியதால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை, நீர் நிலைகளில் ஆழ்குழாய் மூலம் நீர் பாய்ச்சி சமாளித்து வருகின்றனர். மேலும் கொளுஞ்சிப்பட்டியில் கால்நடைகள் மட்டுமின்றி மான்களும் குடிநீர் தேடி குடியிருப்புக்குள் வருவதால் ஓணான் கண்மாயில் தண்ணீர் தேக்கி வருகின்றனர்.

News May 15, 2024

சிவகங்கை: மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

image

சிவகங்கையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும்
தனியார் தொழில்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவுகளுக்கு
மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வரும் ஜூன். 7 ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது அந்தந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தெரிவித்தார்.

News May 15, 2024

சிவகங்கை: மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

image

சிவகங்கையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும்
தனியார் தொழில்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவுகளுக்கு
மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வரும் ஜூன். 7 ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது அந்தந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தெரிவித்தார்.

News May 15, 2024

சிவகங்கை : நாளை கனமழைக்கு வாய்ப்பு.

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

சிவகங்கை மழைப்பொழிவு விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேவகோட்டை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

விருதுநகர் திருச்சி ரயிலில் கூடுதல் பெட்டி ..?

image

விருதுநகர்-திருச்சி ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகரில் காலை 6:20 மணிக்கு புறப்படும் விருதுநகர்-திருச்சி ரயில் (ஞாயிறு தவிர) அனைத்து நாட்களும் இயக்கப்படுகின்றன.இந்த ரயில் விருதுநகர்,மானாமதுரை, சிவகங்கை கல்லல்,காரைக்குடி வழியாக திருச்சிக்கு காலை 11:20க்கு சென்று சேரும். தினமும் அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

News May 15, 2024

மினி ஸ்டேடியம் – 3 கோடியில் திட்டம்

image

மானாமதுரை திருப்பத்தூர் தொகுதிகளில் மாங்குளம் ,காரையூர் மினி ஸ்டேடியம் கட்ட இடம் தேர்வு செய்தனர். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. வருவாய்துறையிடம் இருந்து மாவட்ட விளையாட்டு ஆணையத்திடம் நிலங்களை ஒப்படைத்த பின், மினி ஸ்டேடியத்திற்கான கட்டுமான பணி துவங்கும். இங்கு 400மீ., ஓடுதளம் ,வாலிபால்,கூடைப்பந்து, கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கான
கட்டுமான வசதிகள் செய்யப்படும்.

error: Content is protected !!