India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், காவலர் சங்கர மணிகண்டன் மற்றும் ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகை காணாமல் போன வழக்கு தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், அஜித்குமார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கு<

சிவகங்கை: ரயில் எண்கள் 06105/06106 தாம்பரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 13 முதல் 21 வரை காரைக்குடி, தேவகோட்டை சாலை, சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலயங்கள் வழியாக பயணிகள் நலன் கருதி இந்த ரயில் இயங்கும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிவகங்கை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

காரைக்குடி அருகே உள்ள சங்கதிடல் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (19). அவர் வீட்டு மாட்டுக் குட்டகையில் தகரத்தை சீரமைக்கும் பணியில் சுரேஷ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் செய்தனர். அப்போது, அந்த பகுதியில் இருந்த மின்சார வயரில் தகரம் அழுத்தியதால் மின்சாரம் தாக்கி சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <

காரைக்குடி அருகே உள்ள கொத்தாரி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுதாவின் ஒன்றரை வயது மகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சுதா கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, சிறுமி காணாமல் போயிருந்ததையடுத்து, தேடிப் பார்க்கையில் அருகில் உள்ள குளத்தில் சிறுமி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாார். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் காலியாகவுள்ள பல்நோக்கு மருத்துவமனை பணியிடங்களுக்கு விண்ணப்பம் 05.01.2026 முதல் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:sivagampu.nic.in வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <

சிவகங்கை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
Sorry, no posts matched your criteria.