Sivagangai

News July 14, 2024

காவல்துறையினரை பாராட்டிய டிஜிபி

image

திருப்புவனம் அடுத்த கீழ்வேளூர் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் கத்தியால் குத்தி அக்பர் அலி என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அனீஸ் ரஹ்மான், அண்ணாமலை ஆகிய இருவரையும் கண்டுபிடித்த திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அவரது குழுவினரை காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று சென்னைக்கு அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

News July 13, 2024

வடமாநில இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

image

கீழடி அருகே தனியார் டைல்ஸ் கம்பெனியில் மதுசூதன பிரஜாபதி, கயானந்தா பிரதாப் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் நேற்று மது போதையில் கீழடி அருகே உள்ள தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிப்பட்டு 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 13, 2024

சிவகங்கையில் 937 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் குரூப்-1 தேர்விற்கு, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 2703 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்விற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தேர்வு எழுத 2703 பேருக்கு 1766 பேர் மட்டுமே வருகை புரிந்தனர். மேலும் 937 பேர் எழுதவில்லை, 65% பேர் மட்டுமே தேர்வினை எழுதுகின்றனர்.

News July 13, 2024

காரைக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஓ.சிறுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 87 சதவீத மதிப்பெண்ணுடன் தேசிய தரச்சான்று நேற்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு கலெக்டர் ஆஷா அஜித், மாவட்ட சுகாதார அலுவர் விஜயசந்திரன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு வருகின்றனர்.

News July 13, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 20 ஆண்டுகள் சிறை

image

தேவகோட்டையை அடுத்துள்ள உதயாச்சி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார். ஏ.சி மெக்கானிக்கான இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News July 12, 2024

சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில்              சிறிய அளவிலான கோழி பண்ணை (250 கோழிகள் /100 நாட்டுக்கோழிகள்) அமைக்க 50 சதவீத மானிய தொகை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் விருப்பமுள்ள நபர்கள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய எஸ்.பி

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்ட குன்றக்குடியில் ரோந்து பணியின்போது ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்ச ரூபாய் கஞ்சாவை போலீசார் கடந்த 8-ஆம் தேதி கைப்பற்றினர். இந்நிலையில் விழிப்புடன் செயல்பட்டு கடத்தலை தடுத்த காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

News July 12, 2024

தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு

image

மத்தியப் பிரதேசம் போபாலில் நடைபெறும் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் செவ்வூர் ஏ.வி.எம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேவஜெஃபினா, பார்கவி ஆகியோர் ‘ஒருங்கிணைந்த விவசாய முறை மற்றும் கூட்டுறவு முறை’ எனும் தலைப்பில் அறிவியல் ஆய்வு கட்டுரையை ஆகஸ்ட் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சமர்ப்பிக்க உள்ளனர். அதனையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத்திடம் இன்று வாழ்த்துக்களை பெற்றனர்.

News July 12, 2024

நிவாரணத் தொகை வழங்கிய ஆட்சியர்

image

தேவகோட்டை அடுத்த சின்ன பிரம்பு வயல் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் இருந்து 4 கொத்தடிமைத் தொழிலார்கள் மீட்கப்பட்டு, மாவட்ட கொத்தடிமை மறு வாழ்வு நிதியிலிருந்து ரூ.1,20,000 நிவாரணத் தொகையினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று வழங்கினார். இதில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News July 12, 2024

சிவகங்கை மதுபிரியர்களுக்கு முக்கிய தகவல்

image

சிவகங்கையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றங்கள் ஆகியவற்றை மூட எஸ் பி பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!