India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தினம் (15.08.2024) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயில்வதற்கு https://www.tahdco.com/ என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.12) நெல்லை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பருவ மழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோய் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி வரும் 30ஆம் தேதி வரை மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், நோய்த் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு போடப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று (ஆக.09) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலச்சொரிக்குளம் கிராமத்தில் வருகின்ற ஆக.14 தேதி மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில் முதல்வரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் வந்து கலந்து கொள்வதால் பொதுமக்கள் தங்களுக்குள்ள குறைகள் சந்தேகங்கள் பிரச்சினைகள் ஆகியவற்றை மனுவாக எழுதி கொடுத்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் செப்., அக்., மாதங்களில் நடைபெற உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் https:\\sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 25ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம்.
சிவகங்கை மாவட்டம் உடையனகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வினோத் கண்ணன் என்பவரை இன்று(ஆகஸ்ட் -8)திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான் புதூர் சாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் ஓட ஓட சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே வினோத் கண்ணன் உயிரிழந்தார். முன்விரோதத்தால் பழிக்கு பழி கொலையா என்ற கோணத்தில் திருப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டரமாணிக்கம் அருகே தெற்குபட்டி மாணிக்க நாச்சி அம்மன் கோவிலில், பட்டிமன்ற பேச்சாளர் தேவகோட்டை ராமநாதனுக்கு உலக தமிழ் பறவை என்னும் பட்டய விருதையும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் ஆன பொற்கிழியையும் பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ பிச்சை குருக்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் கல்வி நிறுவனங்கள், ஊர் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.