Sivagangai

News August 14, 2024

சிவகங்கையில் நேற்று பெய்த மழையின் அளவு

image

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு பின்வருமாறு இளையான்குடி மழை 13.00மி.மீ லேசான மழை, திருப்புவனம் 16.80 மி.மீ மிதமான மழை, காளையார் கோவில் 6.40 மி.மீ லேசான மழை, மொத்த மழையின் அளவு 36.20 மி.மீ சாரசரி மழை அளவு 4.02 மி.மீ லேசான மழை, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி போன்ற பகுதிகளின் மழை பதிவாகவில்லை.

News August 14, 2024

முதல்வர் குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து

image

சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் நேற்று(ஆக.13) காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும். அதற்குத்தான் காவிரி ஆணையம் உள்ளது. மேலும், தமிழக முதல்வர் யாருக்கு வேண்டுமானாலும் பதவி வழங்கலாம். யாரை வேண்டுமானாலும் அமைச்சரவையில் சேர்க்கலாம், நீக்கலாம் என்றார்.

News August 14, 2024

சிவகங்கையில் சார் பதிவாளர் பணியிடைநீக்கம்

image

சிவகங்கை கூட்டுறவுத்துறை சார்ந்த நியாய விலைக் கடை பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் மாவட்ட கூட்டுறவு விற்பனை பண்டகச்சாலை கீழ் இயங்கும் நியாயவிலைக் கடையின் மொத்த விற்பனையாளர்களுக்கான 3 காலி பணியிடங்கள், போலி நியமன ஆணைகள் மூலம் நிரப்பப்பட்டது. இதுதொடர்பாக இணை பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சார்-பதிவாளர் சரவணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News August 13, 2024

சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட அனைத்து தாலுகா முழுவதிலும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக-15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷாஅஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

சிவகங்கை ஆட்சியர் வெளியிட்ட புது தகவல்

image

சிவகங்கை மாவட்டம் முழுவதும் புதுவயல், சிங்கம்புணரி, பள்ளத்தூர் வாரச்சந்தைகளில் முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-26, மேஜை தராசு-3, விட்டத்தராசு-15, இரும்பு எடைக்கற்கள் 44 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-16 என மொத்தம் 104 எடையளவுகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

News August 13, 2024

சிவகங்கை தொழில் முனைவோர்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவை, வணிக ஒருங்கிணைப்பு சேவைகளை, மதி சிறகுகள் தொழில் மையம் (MSTM)” வாயிலாக பெறலாம். மேலும், இச்சேவைகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 9047417828 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

யார் இந்த தேவநாதன் யாதவ்?

image

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? வின் டிவியின் நிறுவனரான இவர் யாதவ மகா சபையின் தலைவராகவும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவன தலைவராகவும் உள்ளார். பாஜக கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு திருவாடணை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 11,842 வாக்குகள் பெற்றார். 2024 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு 1,95,788 ஓட்டுகள் பெற்றார்.

News August 13, 2024

திருவிழா ஊர்வலத்தில் விஷ வண்டு கடித்து 40 பேர் காயம்

image

சிவகங்கை மாவட்டம், சுந்தரநடப்பு கண்மாய் கரையில் அமைந்துள்ள அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழாவில் கிராம மக்கள் இன்று(ஆக.,13) தீச்சட்டி எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, கதண்டு வண்டு கடித்து 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News August 13, 2024

சிவகங்கையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

image

சிவகங்கை சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை(ஆக.,14) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி செங்கரை, லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 – மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும். அதேபோல், தேவகோட்டை நகா், உதையாச்சி, எழுவன்கோட்டை, க.கோட்டை, வேப்பங்குளம், உஞ்சனை உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 10 – 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

News August 13, 2024

கால்நடைகளுக்கு ஆக.30 வரை தோல் கழலை நோய் தடுப்பூசி

image

சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பசு மாடுகளுக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோய் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசியானது ஆக.30ம் தேதி வரை மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், மேலும் நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு போடப்படும்‌ என்று கூறினார்

error: Content is protected !!