India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த முருகேசன் என்பவர் நேற்று (செப்.2) மானாமதுரையில் சுமார் ரூ.2 லட்சத்தை தனது ஸ்கூட்டர் சீட்டுக்கு கீழ் வைத்துவிட்டு ஹோட்டலில் உணவருந்த வண்டியை நிறுத்தியுள்ளார். சாப்பிட்ட பிறகு வந்து வண்டியை பார்த்தபோது வண்டியில் இருந்த 2 லட்சம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதர் ஆலயத்தில் வளர்க்கப்பட்டு வரும் யானை சுப்புலட்சுமி.யானைக் கொட்டகையில் பெரும் தீ விபத்து காயம் ஏற்பட்டுள்ளதால் கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று சுப்புலட்சுமி யானையை பார்வையிட்டு மருத்துவரிடம் யானையின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 14.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 2024 – 2025ம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக, ரூ.1,912.95 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். நகை கடன் ரூ.1,117.50 கோடி, பயிர் கடன் ரூ.200 கோடி, மகளிர் குழு கடன் ரூ.182.25 கோடி, கால்நடை பராமரிப்பு கடன் ரூ.75 கோடி, மற்ற கடன்கள் ரூ.338.20 கோடி என இலக்கு வைத்துள்ளனர். கடந்த வருடம் ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.549.80 கோடி வரை கடன் வழங்கியுள்ளனர்.
சிவகங்கை கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வரும் நிலையில், நேற்று(செப்.11) 2 அடி ஆழத்தில் சுடுமண்ணால் கட்டப்பட்ட செங்கல் கட்டுமான சுவர் கண்டறியப்பட்டுள்ளது. அதில் இருக்கும் ஒவ்வொரு செங்கலும் சுமார் 32 செ.மீ நீளமும், 23 செ.மீ அகலமும், 6 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. எனவே இங்கு கட்டுமான குடியிருப்போ அல்லது தொழிற்சாலையோ இருந்ததா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நாளை(செப்.13) காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே வேலை நாடுபவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
டெல்லி அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமத்தின் கீழ் சிவகங்கை காரைக்குடியில் மத்திய மின் வேதியல் ஆய்வு மையத்தில் (சிக்ரி) ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பார்வையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன்று சிக்ரியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் பார்வைக்காக வைக்கப்படும் கண்காட்சியை பொது மக்கள் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கலெக்டர் அலுவலகத்தில் செப். 24 அன்று காலை 11:00 மணிக்கு சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அளவில் உள்ள அனைத்து தொழில் முனைவோர், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர் பங்கேற்று சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து ஆலோசனை வழங்கலாம் என்றார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மேற்கொண்ட ஆய்வில் சில அலுவலர்களிடம் காணப்பட்ட தொய்வான நடவடிக்கைகள் காரணமாக வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் அங்கன்வாடி மைய பணியாளர் ஒருவர், சமையலர் இருவர் உடனடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – II (தொகுதி- II மற்றும் தொகுதி- II A) தேர்விற்காக
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13,260 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வினை தேர்வாளர்கள் விதிமுறைகளை பின்பற்றி சிறந்த முறையில் எழுதிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.