Sivagangai

News September 15, 2024

இளங்கலை மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி

image

சிவகங்கை மாவட்டத்தில் ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இளங்கலை மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி முதல் 21 வரை வினாடி வினா போட்டி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. போட்டியானது நான்கு நிலைகளில் நடைபெறவுள்ளது. நாடு தழுவிய ஆன்லைன் போட்டியில் மாணவர்கள் இருவர் கொண்ட குழுக்களாக பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சிய ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

இணையமைச்சர் எல்.முருகன் சிவகங்கை வருகை

image

சிவகங்கை மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை ஆய்வு செய்ய மத்திய தகவல்&ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் வேல்முருகன் இன்று (செப்.15) சிவகங்கை வருகை புரிகிறார். சிவகங்கை மாவட்ட பாஜக தலைவரான மேப்பல் சக்தி அவர்களின் சொந்த ஊரான மேப்பல் கிராமத்தில் மேற்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சி முடித்து அமைச்சர் மேலூரில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

News September 15, 2024

சிவகங்கையில் 1,207 வழக்குகளுக்கு தீர்வு

image

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நேற்று (செப்.14) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,207 வழக்குகளுக்கு 5 கோடியே 95 லட்சத்து 36 ஆயிரத்து 534 ரூபாய்க்கு தீா்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.

News September 15, 2024

டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

மிலாடிநபி தினத்தை முன்னிட்டு செப்.17 அன்று டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உள்ளிட்ட மதுக்கூடங்களை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபானகடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A, FL3AA உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் மிலாடி நபி தினத்தில் முழுவதுமாக மூடப்படும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

வைகை அணையில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க ஆணை

image

பெரியாறு பாசனப்பகுதியாகிய 85,563 ஏக்கர் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் பாசன பரப்பு 19,439 ஏக்கர் என 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும்,75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான ஆணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிவகங்கை மாவட்ட விவசாயிகளும் பயன்பெறுவர்.

News September 14, 2024

ஆந்திராவுக்கு ஏற்றுமதியாகும் திருப்புவனம் தேங்காய்

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தேங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் தேங்காய் உற்பத்தி குறைவானதால் அங்கு தேங்காய் விலை அதிகரித்து விட்டது. இதன் காரணமாக திருப்புவனத்திற்கு வந்து ஆந்திர வியாபாரிகள் தேங்காயை ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் ரூ.28 விற்ற தேங்காய் தற்போதைய ரூ.40 விற்பனையாகிறது.

News September 14, 2024

சிவகங்கையில் 3470 பேர் ஆப்சென்ட்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு இன்று நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 13200 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் சிவகங்கையில் 4783 பேர், தேவகோட்டையில் 1187 பேர், காரைக்குடியில் 3760 பேர் என மொத்தம் 9730 பேர் தேர்வு எழுதினர். மேலும் விண்ணப்பித்திருந்த 3470 பேர் தேர்வு எழுதவில்லை.

News September 14, 2024

முதல்வர் காப்பீட்டு திட்டம் மூலம் 4625 பேர் பயன்

image

சிவகங்கை மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் காப்பீடு திட்ட வருவாய் ஈட்டியுள்ளனர். இத்திட்டம் மூலம் ஆப்பரேஷன், பிளாஸ்டிக் சர்ஜரி, புற்றுநோய் சிகிச்சை, டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சை மூலம் 4,625 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர் என‌ மாவட்டம் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2024

தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று(செப்.14) நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் தொகுதி-II A) தேர்வினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News September 14, 2024

சிவகங்கையில் குழந்தை திருமணம் குறைவு

image

சிவகங்கை மாவட்டத்தில் 2024-2025ம் ஆண்டில் இதுவரை 47 குழந்தை திருமணம் நடந்துள்ளது. 18க்கு உட்பட்ட சிறுமிகள் 23 பேரும், 2022-2023ம் ஆண்டில் 33 சிறுமிகளும் கர்ப்பம் அடைந்துள்ளனர். 2022-23ல் 80 பேருக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. அதே போன்று 2023-2024ல் 73 சிறுமிகள் கர்ப்பம் அடைந்தும், 55 குழந்தை திருமணம் நடந்துள்ளது. கடந்த 2 ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு குறைந்துள்ளது.

error: Content is protected !!