India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிப்காட் காவல் நிலைய எஸ்ஐ ராகார்ஜுனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது செய்களத்தூர் பகுதியைச் சேர்ந்த காமேஷ் (19) சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று (செப்.25) கைது செய்து 66 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி திருமலையில் பிரம்மோதஸவம் திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிரம்மோத்ஸவம் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்காக காரைக்குடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருப்பதிக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் அக்.10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டையில் தனியாா் நிதி முதலீட்டு நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.10000 வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. நிறுவனத்தில் உறுப்பினா்களாக சோ்ந்த 2,500 பேரிடம் மொத்தம் ரூ. 250 கோடி வசூல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ.250 கோடி மோசடி செய்ததாக
அதன் நிா்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையினர் நேற்று சோதனை நடத்தி சீல் வைத்தனா்.
புதுவயல், அழகாபுரி, சாக்கோட்டை, வீரசேகரபுரம், கருநாவல்குடி, பெத்தாச்சி குடியிருப்பு, பீர்க்கலைக்காடு, விளாரிக்காடு, ஜெயங்கொண்டான், வேங்காவயல், மணக்குடி, சிறுகவயல், சாக்கவயல், நமித்ராவயல், செம்பிலான் வயல், சுட்டி நெல்லிப்பட்டி, மாத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை (செப் 26) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாடக்கோட்டை கிராமத்தில் கிராவல் குவாரியில் சிவகங்கை இந்திரா நகரைச் சேர்ந்த கேசவன்(49) மேற்பார்வையாளராக உள்ளார். நேற்று கேசவனும் குவாரியில் பணிபுரியும் ஆரோக்கிய திரவியம் என்பவரை மர்ம நபர்கள் வாளை காட்டி மிரட்டி குவாரியில் இருந்த ரொக்கம் ரூ.1,60,000 மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் 2022-23 மற்றும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்கள் உயர்கல்வியில் சேர மீண்டும் ஒரு அறிய வாய்ப்பாக நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம் இன்று நடைபெற உள்ளது. மேலும் கல்விக்கடன், கல்லூரியில் சேர உடனடியாக அட்மிஷன் போன்றவைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 2024-25ம் கல்வியாண்டில் தொழிற்கல்வியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன்/ மகள் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.ksb.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக வருகின்ற 30.11.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, வீர தீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் சான்றிதழ், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(ம)சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவை தொழிலாளர்களுக்கு புதிய முன்னெடுப்பாக திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்(ம)சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன் பாலசுப்ரமணியன் 132 கார்களின் லோகோ என்று சொல்லப்படும் சின்னங்களை 58 நொடிகளில் கூறி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இம்மாணவரின் உலக சாதனையை அங்கீகரித்து கலாம் உலக சாதனை பதிவேற்றில் பதிவேற்றப்பட்டு சான்றிதழ் மெடல் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி ஆலோசகர் சுப்பையா வாழ்த்தினார்
Sorry, no posts matched your criteria.