India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு லாரியை எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு டிரைவர் தூங்கியுள்ளார்.அப்போது கமுதியிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி சரக்கு லாரியின் மீது மோதி விபத்தானது. இதில் மணல் லாரி டிரைவர் ரங்கசாமி காயமடைந்தார்.இது குறித்து புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்
சிவகங்கையில் வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலர் பயிற்சி கல்லுாரி தொடங்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி.,தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். அவரது கோரிக்கைக்கு கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் நேற்று (செப்.28) பதில் கடிதம் அளித்துள்ளார். அதில் பெண் காவலர் பயிற்சி கல்லுாரி துவங்க அவசியம் இல்லை என பதில் அளித்துள்ளதால் கார்த்தி சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களின் வாட்ஸ் ஆப்பில் வங்கி ஒன்றின் சின்னத்துடன் அருகிலேயே ரிவார்ட்ஸ் எனக் கூறி குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால் வாட்ஸ்அப் முடக்கப்பட்டு பணம் திருடப்படுகிறது. இந்த லிங்க் திருப்புவனம் பகுதி விஏஓக்கு (செப்.27) வந்துள்ளது. கிளிக் செய்ததால் அவரது வாட்ஸப்பில் குரூப்பில் இருந்த வருவாய் துறையினர் வாட்ஸ்அப் முடக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே 100 நாள் வேலைவாய்ப்பு பணிக்கு சென்று திரும்பிய சின்ன சோமநாதபுரத்தைச் சேர்ந்த கவிதா (44), கல்லலை சேர்ந்த வசந்தி (46) ஆகிய இருவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுகுளத்தான் கண்மாயில் பணி செய்து திரும்பிய போது, மழை தூறலுக்காக புளிய மரத்தடியில் ஒதுங்கிய போது இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதன்காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை உள்ளிட்ட 25 மாவட்டங்களின் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலர் பயிற்சி கல்லுாரி தொடங்க வேண்டும் என்று எம்பி கார்த்தி தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். 8 இடங்களில் நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகள் உள்ளது. பெண் காவலர்களுக்கு என்று பிரத்யேகமாக புதிய காவலர் பயிற்சி பள்ளி துவங்க வேண்டிய சூழல் இல்லை என கோரிக்கைக்கு கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் பதில் கடிதம் அளித்துள்ளார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று டெல்லியில் நடந்த விழாவில், இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத்தலமாக சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தண்கர் அவர்களிடமிருந்து கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். இந்த விருது கீழடி மக்களுக்கு பெருமைசேர்ப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் சிவகங்கை நகராட்சி சார்பில் உலக வெறிநோய் தடுப்பு தினம் (செப்-28) முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை சிவகங்கை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமினை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் துவக்கி வைக்க உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ், நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன், கிரையத் தொகையினை இந்தியன் ஒவர்சிஸ் வங்கியின் மூலமாக
குறைந்த வட்டியில் கடனாக பெற்று பயன்பெறுவதற்கென விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனை, தகுதியுடையோர் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
உயர்வுக்குப் படி முகாமின் மூலம் சிவகங்கை, சிங்கம்புணரி, காரைக்குடி ஆகிய பகுதிகளில்
நடைபெற்ற முகாமின் அடிப்படையில், மொத்தம் 84 மாணாக்கர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, உயர்கல்வியின் முக்கியத்துவத்தினை மாணாக்கர்கள் கருத்தில் கொண்டு உயர்கல்வி கற்று, தங்களது வாழ்க்கை தர மேம்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.