India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 20,000 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால், 2 கண்டெய்னர்கள் மூலம் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, சேலம் ஆவின் பால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 10,000 லிட்டர் பால் சென்னை அடையாரில் உள்ள கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், சித்த மருத்துவ பிரிவு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாத காலத்திற்குள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (22-01-2025) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, மல்லுார் பகுதி துணை மின்நிலையம், இடைப்பாடி பகுதி துணை மின்நிலையம், பூலாம்பட்டி பகுதி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரங்கனூர் கிராமம் பொம்மியம்பட்டி கலர் காடு பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 44) என்பவரது குடிசை வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த நங்கவள்ளி தீ அணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் குடிசை வீடு எரிந்துவிட்டது. மேலும் வாஷிங் மெஷின், கிரைண்டர், வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்துசேதமடைந்தது. மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 21 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்
சேலம் மாநகரத்தில் மெடிக்கல்களில் விற்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகளை விற்பதற்காகவே ஒரு நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. இந்த கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட காவல்துறையினர் வாகன தணிக்கையில் உரிய முறையில் ஈடுபடுவது இல்லை என தொடர்ந்து வந்த புகார் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அவரின் ஏற்பாட்டின்படி மாற்றுடையில் வாகனத்தில் போலீசார் மேற்கொண்ட ரகசிய பயணத்தில் ஆறு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 காவலர்கள் முறையாக செயல்படாதது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இன்று (ஜன.21), ஜன.28 ஆகிய தேதிகளில் ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் (56108) ஈரோடு முதல் திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56109) திருப்பத்தூர் முதல் ஈரோடு வரையிலும் இயக்கப்படும்; இந்த ரயில்கள் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் விற்பனைக்காக வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பை கப்புகள் பறிமுதல்செய்து அழித்தனர். இந்நிலை தொடரும்பட்சத்தில் உரிமம் ரத்துசெய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்தனர்.
“பூத் கமிட்டி, கிளை நிர்வாகிகள் 100% அர்ப்பணிப்போடு தேர்தல் பணியாற்ற வேண்டும். கடந்த தேர்தலில் மிகக் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் நாம் தோல்வியுற்றோம். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மிக எழுச்சியோடு கொண்டாட வேண்டும்” என சேலம் ஓமலூரில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Sorry, no posts matched your criteria.