Salem

News January 28, 2025

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் (ஜனவரி 28) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 10 மணி பாட்டாளி மக்கள் கட்சி கலந்தாலோசனை கூட்டம். டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு –  இரும்பாலை ரோடு .2) காலை 10 மணி சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி – கொண்டலாம்பட்டி 3) மாலை 5 மணி விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் – கோட்டை மைதானம். 

News January 28, 2025

சேலத்தில் 35 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

சேலம் கோட்டம் சார்பில் முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை (ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு சேலம் மற்றும் தர்மபுரி பகுதிகளில் இருந்து மேட்டூர், மாதேஸ்வரன் மலை ஆகிய பகுதிகளுக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர் கோவில் ஆகிய ஊர்களுக்கு 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

News January 28, 2025

சேலம்: அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில், தமிழ்நாட்டில் உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சேலத்தில் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தும், The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai 600006 முகவரிக்கு தபால் வழியாகவும் அனுப்பலாம். கடைசி தேதி 08.02.2025 ஆகும்.

News January 27, 2025

சேலத்தில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை

image

சின்னசீரகாபாடி, மதுரையான் காடு பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி சின்னத்தாயி (88). இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் காலை நீண்ட நேரம் ஆகியும் சின்னதாயி வெளியே வராததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்த பொழுது வீட்டில் ரத்த காயத்துடன் சின்னத்தாயி இறந்து கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 27, 2025

ஆபத்திற்கு ஆளாக வேண்டாம்; போலீசார் அறிவுறுத்தல்

image

சேலம் மாவட்ட போலீசார் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில்,”தொலைதூர அல்லது இரவு நேர பயணங்களின் போது, போதுமான அளவு ஓய்வுக்கு பின் பயணததை மேற்கொள்ளுங்கள். அசதியில் வாகனத்தை இயக்கி ஆபத்திற்கு ஆளாக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

News January 27, 2025

சேலம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில்காவல் அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று 27-1-2025 இரவுரோந்து அதிகாரிகளின் விவரம்

News January 27, 2025

ஜனவரி 31 விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் சேலம்

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News January 27, 2025

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து- மக்கள் தர்மஅடி

image

சேலம் மாவட்டம், பூலாம்பட்டி சந்தையில் இன்று (ஜன.27) மதியம் மது அருந்திவிட்டு காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய 4 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சாலையோரம் இருந்த கடைகள் சேதமடைந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனவும் தகவல். 

News January 27, 2025

இ.பி.எஸ். மீதான வழக்குக்கு தடை

image

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் விவரங்களை மறைத்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க கீழமை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

News January 27, 2025

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

குடியரசுத் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம், ஆத்தூர், மேட்டூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், அதிகாரிகள் நேற்று (ஜன.26) நடத்திய ஆய்வில் இயங்கிய 34 கடைகள் உள்பட் 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் என சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

error: Content is protected !!