India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாநகர காவல் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை பொதுமக்கள் ஓட்ட வேண்டும், அதிவேகம் ஆபத்தாக முடியும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதுகாப்பாக பயணம் செய்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று (12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் (12.09.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

சேலம் வழியாக ஈரோடு-ஜோக்பானி-ஈரோடு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை (16601/16602) வரும் செப்.15- ஆம் தேதி பீகார் மாநிலம், ஜோக்பானி ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வரும் செப்.16- ஆம் தேதி நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் செப்.15- ஆம் தேதி சேலம் வருகிறார். விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அடையாள அட்டை மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

சேலத்தில் பெண்களுக்கு சான்றிதழுடன் கூடிய ஒரு மாத இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி முடிவடைந்ததும் பெண்கள் மானியத்துடன் கூடிய தையல் மிஷின் பெறுவதற்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். பயிற்சி வரும் செப்.15- ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 99443-92870 என்ற தொலைபேசி எண்ணில் பதிவுச் செய்துக் கொள்ளலாம்.

சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

இ-வாடகை கைபேசி செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளம் https://mts.aed.tn.gov.in/evaadagai விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் கோரிமேடு இருபாலர் ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை மகளிர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐக்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் செப்.30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிஐயில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

▶️சேலம் மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.