India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் சுமார் 9,200 ஏக்கர் பரப்பளவில் பூவன், ரஸ்தாலி, கற்பூரவல்லி, செவ்வாழை, கதலி, நேந்திரன் மற்றும் ஜி 9 போன்ற இனங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மானிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம், மின் மோட்டார் பம்ப்செட்டுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.33.87 கோடி மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரில் இன்று (13.02.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
சேலம் மாவட்டத்தில் இன்று (13.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
சேலம், மகுடஞ்சாவடி, அ. தாழையூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பணி முடித்துவிட்டு மாலையில் தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது சீரகாபாடி அருகே முன்பக்க டயர் வெடித்ததில், சாலையின் செண்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த தப்பக்குட்டை கிராமம் ஸ்ரீ சிவகாமி அம்மாள் சமேத சீர்காழிநாதர் மற்றும் விநாயகர், அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், காலபைரவர் திருக்கோயிலில், மஹா கும்பாபிஷேக விழாவையொட்டி 1,000க்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும், வரும் பிப்.16- ம் தேதி கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
“தமிழ்நாடு முதலமைச்சர் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையிலான சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள்; தமிழ்நாடு முதலமைச்சர் வளர்ந்து வரும் மக்கட்தொகை தேவைக்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள்” என சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆய்வக தொழில்நுட்புனர் வேலு என்பவரை. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகளின் புகாரையடுத்து விசாரித்த கல்லூரியின் விசாரணைக் குழு, பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சேலம் வணிக வரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதியதாகக் கட்டப்படவுள்ள பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (பிப்.13) அடிக்கல் நாட்டினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 4வது குடியரசுத் தினக் குழு விளையாட்டு இறகுப்பந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி முதல் மற்றும் இரண்டாம் பரிசை வென்றவர்கள், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனை இன்று (பிப்.13) நேரில் சந்தித்து கோப்பையைக் காண்பித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.