India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO மூலம் கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக கோவை-தன்பாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (03680) நாளை (ஆக.05) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 08.25 நிமிடங்கள் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் குறிப்பிடத்தக்கது.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் புதன்கிழமை ஆகஸ்ட்-6 தேதி பொங்கல் வைபவம் நடைபெற உள்ளது. அதற்காக அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாள் மாற்றாக 23ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்
சேலம் அரசு பொருட்காட்சி போஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு பார்வையிட்ட மொத்த பார்வையாளர்கள் 1,47,267, இதில் பெரியவர்கள் 1 21,845 மற்றும் சிறுவர்கள் 25,422 பேர் ஆவார்கள். எனவே இந்த ஆண்டும் பொதுமக்கள் இந்த அரசுப் பொருட்காட்சியை பயன்படுத்தி கொண்டு பயனடையவும், விழா சிறக்கவும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம் அரசு பொருட்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள் சாமிநாதன், ராஜேந்திரன், ஆகியோர் அரசின் சார்பில் பயனாளிகளுக்கு நல உதவிகளை இன்று வழங்கினார். இதில் மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மகளிர் உரிமைததொகை, சமூக நலன் தாட்கோ, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 200 பயனாளிகளுக்கு ரூபாய் 1.98 கோடி மதிப்பிலான நல உதவிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட்- 9 தேதி மகுடஞ்சாவடி இக்காட்டூர் பகுதியிலும், 23-ஆம் தேதி கன்னங்குறிச்சி பகுதியில் வித்யாமந்திரி பள்ளியிளும், 30-ஆம் தேதி எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிளும், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்.4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம் .
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இதன் காரணமாக, இன்று ஆக.04 முதல் ஆக.07- ஆம் தேதி வரை சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.