India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் ,அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நினையில் (பிப்ரவரி 17) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, “எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்” என்று பொறுப்பற்ற முறையில் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது; முறையான விசாரணை தேவை என இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, “எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்” என்று பொறுப்பற்ற முறையில் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது; முறையான விசாரணை தேவை என இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 2024ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 3 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை இன்று (பிப்.17) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். விழாவில் சேலத்தில் இருந்து அமைச்சர், ஆட்சியர், சார் பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03680) நாளை (பிப்.18) காலை 07.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 16 மணி நேரம் தாமதமாக நாளை நள்ளிரவு 11.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அலுவலகத்தினை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார். ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 20 கிராமங்களும்,மேச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 4 கிராமங்களும், பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 2 கிராமங்களும் 26 கிராமங்கள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு <
சேலம் அருணாச்சல ஆசாரி தெருவில் 5 தலைமுறை வாரிசுகளுடன் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சரஸ்வதி அம்மாள் பாட்டி. கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள், பேரன், பேத்திகளுடன் கேக் வெட்டி உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்கம், பக்கத்தினரும், புதுமண தம்பதிகள் உள்ளிட்டோரும் பாட்டியிடம் ஆசி வாங்கி மகிழ்ந்தனர்.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் . அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் (GRAMIN DAK SEVAKS -GDS) புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.