India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கிச்சிபாளையம் பகுதியில் போதை மாத்திரையையும் ஊசி விற்பனை செய்ததாக சுதர்சன், தினேஷ்குமார் கிஷோர், சரவணன் அக்பர் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்து, 800 போதை மாத்திரை 50 சிரஞ்ச் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரயில்வேயில் 32,438 குரூப் டி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க இங்கே <
தர்மபுரி சிறையில் தர்மபுரி கிருஷ்ணகிரி குற்ற வழக்குகளில் உள்ளூர் கைது செய்து அடைக்கப்படுவர் 150 கைதிகள் உள்ளனர். கைதிகளை பார்க்க வருபவரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் விசாரணையில் இரண்டு சேலை வார்டன்கள் 400 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. சேலம் மாவட்ட சிறை எஸ்பி வினோத் விசாரணை நடத்தி சௌந்தர்ராஜன் திருப்பதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய அறிவிப்புகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விலை உயர்வால் சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் 20% வரை விற்பனை சரிந்துள்ளது. நிகழ்ச்சி, சுப முகூர்த்த நாட்கள் உள்ளதால் பெரிய அளவில் விற்பனை குறையவில்லை. தவிர பழைய தங்கத்தை புது தங்கமாக மாற்றத் தொடங்கியுள்ளனர். தங்க நாணயம் வாங்குவதும் உயர்ந்துள்ளதாக சேலம் மாநகர தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் தகவல்!
சேலம் மாநகரில் இன்று (20-2-2025) இரவு 11 முதல் காலை 6 மணி வரை ஊரகம் சங்ககிரி ஆத்தூர் மேட்டூர் வாழப்பாடி ஆகிய உட் கோட்டாவில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுபவர்கள் காவலரின் விவரங்கள் மேலே குறிப்பிட்ட உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள
உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்தில் அழைக்கலாம். தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
ரெசோனன்ஸ் கன்சல்டன்சி நிறுவனம், 2025- ஆம் ஆண்டுக்கான ஆசிய- ஃபசிபிக் பிராந்தியத்தில் 100 தலைசிறந்த 100 நகரங்கள் பட்டியலை சிங்கப்பூரில் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழகத்தின் சென்னை, திருச்சி, சேலம், கோவை ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. பட்டியலில் 79- வது இடத்தில் சேலம் மாவட்டம் இடம் பிடித்துள்ளது.
சேலத்தில், பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் புதர் மறைவில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இதுகுறித்து உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ? கமெண்ட் பண்ணுங்க
சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும் பகல் நேரத்தில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. நேற்று சேலம் மாவட்டத்தில் 96.3 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை சாப்பிடுகின்றனர்.
சேலம், பெருமாம்பட்டி அருகே உள்ள தும்பா தூளிபட்டியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் சத்தியமூர்த்தி (36). இவர் தனது பைக்கில் பணிக்கு சென்ற போது சிவதாபுரம் ரயில்வே பாலத்தின் கீழ் எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று (பிப்.19) நடைபெற்றது. இதில் சேலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனைகள் பவித்ராவிற்கு ரூ.5 லட்சம் தொகையையும், கோபிகாவுக்கு ரூ.3 லட்சம் தொகையையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.