India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கும் பிரதம மந்திரி பயிர் காப்பீடடுத் திட்டத்தில், காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என சேலம் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத்தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகம் துவங்கியது. அதன்படி கடந்த 19-ம் தேதி வரை 42 நாட்கள் 252 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் அரசு கூறிய 43 சேவைகளில் 65,320 மனுக்களும், மற்ற சேவைகள் கோரி 38,571 மனுக்களும், வரப்பட்டு உள்ளது. இது மட்டும் இன்றி கலைஞர் உரிமைத்தொகை கேட்டு 1,13,727 மனுக்கள் வரப்பட்டுள்ளது மொத்தம் 2,17,618 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கலைஞர் உரிமைத்தொகை, என பல்வேறு மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை கலைஞர் உரிமைத் தொகையை மட்டும் கேட்டு1,13,727 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் ஒரே ஆண்டுகள் தொடர்ந்து காவல் நிலையங்கள் பணியாற்றி வரும் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, ஆகிய ஆறு உட்கோட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 20 சிறப்பு எஸ்.ஐ உட்பட 150 போலீசார் இடமாற்றம் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டார்.

சேலம் மக்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 130 Credit Manager, பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

தசரா மற்றும் சபரிமலை சீசனை முன்னிட்டு கூட்டநெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக ஹூப்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் (07313/07314) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்.28- ஆம் தேதி முதல் டிச.28- ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம், ஈரோடு, போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரம்மோற்சவ விழா நாளை (செப்.24) முதல் அக்.02- ஆம் தேதி வரை நடக்கின்றது. இதையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக நாளை (செப்.24) முதல் அக்.02 வரை இருமார்க்கத்திலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதிக்கு காலை 8, 9, 10 மணிக்கும், இரவு 9,09.30,10.30 மணிக்கும் இயக்கப்படுகிறது

மத்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <

சேலம் மக்களே..சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது. அதன்படி, ரூ.15 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம், வரை வங்கிக்கடன் பெற்று இத்திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் பயன்பெறலாம். மேலும் சேலம் மாநகராட்சி மைய அலுவலகம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, மண்டல அலுவலகங்களில் (அக்.2) வரை நடைபெறும் என சேலம் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

சேலம் முள்ளுவாடி கேட்டின் பிரட்ஸ் ரோட்டில் ரூபாய் 72 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இப்பணிகள் இன்று (செப்.23) முதல் நடைபெறவுள்ளதால் முள்ளுவாடி கேட் மூடப்படுகின்றன. அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது. எனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.