India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள் என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

சேலம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். பருவமழையினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் “1077” என்ற எண்ணிலோ, கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.120-ல் செயல்பட்டுவரும் கட்டுப் பாட்டு அறையை 0427-2452202 என்ற எண்ணிலோ 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். மக்களே, SHARE பண்ணுங்க!

சேலம்: மின் பராமரிப்பு பணிகளால் இன்று (செப்.24) தீவட்டிப்பட்டி, ஆறகளூர், தளவாய்பட்டி, தலைவாசல், மணிவிழுந்தான் வடக்கு, வேப்பம்பூண்டி, மணிவிழுந்தான் தெற்கு, சித்தேரி, சிறுவாச்சூர், ஊனத்துார், புத்துார், நாவலுார், தேவியாகுறிச்சி, தியாகனுார், தொப்பூர், செக்காரப்பட்டி, எலத்துார், கொண்ரெட்டியூர், எருமப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. SHARE IT!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மிதவேகத்தில் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் செப்டம்பர் 24 நாளை அரசு குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் இடங்கள்
♦️ கொண்டப்பநாயக்கன்பட்டி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம்
♦️ இடைப்பாடி நகராட்சி அலுவலகம் வெள்ளாண்டி வலசு ♦️பி என் பட்டி பேரூராட்சி அலுவலகம் பிஎன்பட்டி
♦️ ஓமலூர் சமுதாயக்கூடம் பல்பாக்கி ♦️வீரபாண்டி ஏ எம் சி வளர்மதி மண்டபம் மாரமங்கலத்துப்பட்டி ♦️வாழப்பாடி அலமேலு அப்பாவு திருமண மண்டபம் சேஷன்சாவடி

சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத தேசிய மக்கள் கழகம் உள்பட 2 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் அறிவிப்பில் குறிப்பிட்ட தேதியில் தலைமைத் தேர்தல் அலுவலர், தலைமைச் செயலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உரிய ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக கோவை-சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது சேலம் ரயில்வே கோட்டம். அதன்படி, வரும் செப்.28 முதல் அக்.12 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும். முன்பதிவு நாளை (செப்.24) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், திருக்குறள் திட்டத்தின் கீழ் திருக்குறள் பயிற்சி மற்றும் பயிலரங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று துவங்கியது. இந்த பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி துவக்கி வைத்தார். அக்டோபர்-6ம் தேதி முதல் வாரம்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும், இந்த பயிலரங்கத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு பயனடையலாம் என்றார்.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற செப்-25ஆம் தேதி வியாழக்கிழமை பகல் 11 மணி சேலம் மாநகராட்சி மாதாந்திர இயல்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு ஏற்று தங்களது கோட்டங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் குறைகளை தெரிவிக்க வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.