Salem

News February 22, 2025

சேலத்தில் பூண்டு விலை கடும் சரிவு

image

சேலம், செவ்வாய்பேட்டை மார்க்கெட், லீ பஜாருக்கு வட மாநிலங்களில் இருந்து தினசரி பூண்டு வரத்து சுமார் 70 டன்னில் இருந்து 100 டன்னாக உயர்ந்துள்ளது. இதனால் மலைப்பூண்டு கிலோ ரூ.250 ஆகவும், நாட்டு ரக பூண்டு ரகத்திற்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.150 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை கடுமையாக சரிவால் பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.

News February 22, 2025

My v3ads-ல் முதலீடு செய்தவரா நீங்கள்?

image

கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, சேலம் மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.

News February 22, 2025

போக்சோ சட்டத்தில் தாய் மாமன் கைது

image

சேலம் மாவட்டம், ஆத்தூர் தீப்பெட்டி கம்பெனி பகுதியில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த தாய் மாமன் மோகன்குமார் என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ் ஆத்தூர் மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். பள்ளி குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’, விழிப்புணர்வு நிகழ்வின் போது, சிறுமி அளித்த தகவலின் பேரில், தாய் மாமன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 22, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) வரும் பிப்.25ம் தேதி காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயிலில் பயணிப்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 21 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.

News February 21, 2025

பல் மருத்துவத்துக்கு கை கொடுக்கும் முட்டை ஓடுகள்

image

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழு முட்டை ஓடுகளில் இருந்து கால்சியம் பாஸ்பேட் கனிமமான ஹைட்ராக்ஸிபடைட்டை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான இரண்டு தொழில் நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இதன்மூலம் பொடியாக்கப்பட்ட முட்டை ஓடுகளை எலும்பு முறிவுகள், எலும்பு திசு பொறியியல் மற்றும் பல் சிகிச்சைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது ஆய்வக சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

News February 21, 2025

போதை ஊசி விற்பனை செய்த 15 பேர்  கைது 

image

சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கிச்சிபாளையம் பகுதியில் போதை மாத்திரையையும் ஊசி விற்பனை செய்ததாக சுதர்சன், தினேஷ்குமார் கிஷோர், சரவணன் அக்பர் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்து, 800 போதை மாத்திரை 50 சிரஞ்ச் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

News February 21, 2025

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்

image

ரயில்வேயில் 32,438 குரூப் டி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 21, 2025

சேலம்: 400 லஞ்சம் வாங்கிய 2 வார்டன்கள் சஸ்பெண்ட் 

image

தர்மபுரி சிறையில் தர்மபுரி கிருஷ்ணகிரி குற்ற வழக்குகளில் உள்ளூர் கைது செய்து அடைக்கப்படுவர் 150 கைதிகள் உள்ளனர். கைதிகளை பார்க்க வருபவரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் விசாரணையில் இரண்டு சேலை வார்டன்கள் 400 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. சேலம் மாவட்ட சிறை எஸ்பி வினோத் விசாரணை நடத்தி சௌந்தர்ராஜன் திருப்பதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

News February 21, 2025

சேலத்தில் தங்கம் விற்பனை சரிவு!

image

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய அறிவிப்புகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விலை உயர்வால் சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் 20% வரை விற்பனை சரிந்துள்ளது. நிகழ்ச்சி, சுப முகூர்த்த நாட்கள் உள்ளதால் பெரிய அளவில் விற்பனை குறையவில்லை. தவிர பழைய தங்கத்தை புது தங்கமாக மாற்றத் தொடங்கியுள்ளனர். தங்க நாணயம் வாங்குவதும் உயர்ந்துள்ளதாக சேலம் மாநகர தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் தகவல்!

error: Content is protected !!