India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; சேலம் மற்றும் ஆத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த சகி பெண்கள் சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு முதல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாய பெருமக்களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் போதிய அளவு இருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். அதன்படி யூரியா 1575 மெ.ட, டிஏபி 2,985 மெ.ட, பொட்டாஸ் 1,814 மெ.ட, காம்ப்ளக்ஸ்5,015 மெ.ட மொத்தம் 11,389 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருக்க உள்ளதாகவும் நெல் விதை 157.99 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகவரி மையத்தின் சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 9,254 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளது. 1,017 விவசாய பெருமக்களும் நுகர்வோர்களும் பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக வருவாய் வரத்தும் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் இன்று (24.09.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதை பாராட்டி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேடயம் மற்றும் விருது வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் வடக்கு-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (12512) மீண்டும் வழக்கமான பாதையிலேயே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் அக்.05- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு வழியாக இயக்கப்படும் இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செப்.24) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தகவல் தெரிவித்தார்.

சேலத்தில் நடப்பாண்டு பெய்ய வேண்டிய இயல்பான மழையின் அளவு குறைவு என்றும் செப்டம்பர் மாதம் வரை பெய்ய வேண்டிய மலையின் அளவு 651.5 மில்லி மீட்டர் என்றும், ஆனால் தற்போது வரை பெய்துள்ள மழையின் அளவு 543.7 மில்லி மீட்டர் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இது கடந்தாண்டு பெய்த மழையின் அளவைவிட சற்று குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சேலம் தமிழ்நாடு பசுமை தினத்தையொட்டி சேலத்தில் அரசு சட்டக் கல்லூரியில் மரக்கன்றுகள் நட்டு பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். அப்போது அவர் மாவட்டம் முழுவதும் தேவைப்படும் இடங்களில் 8,23,700 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நட்டு மாவட்டம் முழுவதும் பசுமையாகவும், இயற்கை பாதுகாக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் வாயிலாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.