India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,820 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள் அக்.9 ஆகும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டு பாத்ரூமில் எட்டிப் பார்த்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருணா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைகள் நிறைவு பெற்று கருணா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து ஓராண்டு தண்டனை ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் அக்டோபர் 4 இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1)காலை 8 மணி மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நேரு கலையரங்கம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைப்பு 2) காலை 6:00 மணி முதல் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு 3)சுகவனேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணி சனி பிரதோஷம் மற்றும் திருக்கோவில் உலா சிறப்பு வழிபாடு

கெங்கவல்லி அருகே நடுவலூர் சின்னம்மன் கோயில் அருகே வசித்த ராமசாமி (47), இவரது மகன் ப்ரீத்தீஷ் (11) ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தீ பற்றி எறிந்து பரவியதில் ராமசாமியும், ப்ரீத்தீஷும் பலத்த காயமடைந்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை இறந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி மகனும் நேற்று இறந்தார்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் துவங்கியது. சேலம் மாநகராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் எனப் பல்வேறு பகுதிகளில் இந்த முகாம் தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற்றது. இந்த காலக்கட்டத்தில் 283 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் வாயிலாக மொத்தம் 2,83,840 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.03) தண்டனை & அபராதம் என்று பயமுறுத்தும் எந்த அழைப்புகளுக்கும் பயப்படாதீர்கள். ஏனெனில் டிஜிட்டல் கைது என்று எந்த நடவடிக்கைகளும் கிடையாது. அதனால் நிதானமாக யோசித்து செயல்படுங்கள் என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை காவல்துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,10,948 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இது தவிர கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மொத்தம் 1,21,892 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற அக்.10ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் அரசின் சலுகைகள், மற்றும் தேவைகள் உடையோர் கூட்டத்தில் பங்கேற்று தெரிவித்து பயன்பெறலாம் என வலியுறுத்தி உள்ளார்.

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே நிலைக் கொண்டுள்ளது. சேலம் உள்பட சில மாவட்டங்களில் இன்று (அக்.03) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.