Salem

News March 12, 2025

வேண்டுதல்களை நிறைவேற்றும் சுகவனேஸ்வரர் திருக்கோயில்

image

சேலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில். இங்கு ஆவுடையார் பிற்பாகம் 2 பிரிவாகவும், விஷ்யு பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப்பெற்றுள்ளது.இது மற்ற சிவ தலங்களில் காணமுடியாத ஒன்று. இங்கு வழிபடுவதனால் நல்ல வரன் அமையும்,உத்தியோகமும் கை கூடும். மேலும் பல்லி விழும் உபாதைகள் நிவர்த்தி பெற்று சுகம் பெறலாம். இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 12, 2025

பெங்களூரூ கிழக்கு ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிற்காது

image

பெங்களூர் கிழக்கு ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால்,சேலம் கோட்டம் வழியாக செல்லும் ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகம்-மைசூர் எக்ஸ்பிரஸ் (16231), தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் (16235), கன்னியாகுமரி- கேஎஸ்ஆர் பெங்களூர் எக்ஸ்பிரஸ், ஆகிய ரெயில்கள் நாளை முதல் மறு தேதி அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது.

News March 12, 2025

ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் – போலீசார் அறிவிப்பு

image

சேலம் சொர்ணபுரியில் ‘ரீ கிரியேட் பியுச்சர் இந்தியா’ என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி பணம் இரட்டிப்பாக தருவதாக பொதுமக்களிடம்கோடிக்கணக்கில் வசூல் செய்து மோசடி செய்த வழக்கில், இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகாரைக் கொடுக்குமாறு பள்ளப்பட்டி காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதே போல் ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்கள்.

News March 12, 2025

சேலம் மார்ச்.12 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.12) நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். ▶️காலை 10 மணி அயோத்தியா பட்டணம் ஊராட்சி அலுவலகம் திறப்பு ▶️பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்) ▶️ காலை 11 மணி ஓமலூரில் மக்கள் சந்திப்பு திட்ட முகம் ஆட்சியர் ▶️ மாலை 4 மணி விடுதி மாணவ மாணவர்களுக்கு கிச்சன் திட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்).

News March 12, 2025

பெண்ணுக்கு கத்திக்குத்து; தொழிலாளி உள்பட 2 பேர் கைது

image

சேலம் தாதகப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சவுந்தர்யா (வயது 27). இந்தநிலையில் செல்வத்திற்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தகராறில் ஈடுபட்டு சவுந்தர்யாவை கத்தியால் குத்தியுள்ளார். இதற்கு செல்வத்தின் அண்ணன் துரைசாமி உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், துரைசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

News March 11, 2025

நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்று மாணவி அசத்தல்

image

20-வது தேசிய இளம் தடகள சாம்பியன்ஸ் போட்டி பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரில் நடைபெற்றது. சேலம் கைலாஷ் மான்சரோவர் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் சாஷா ஶ்ரீ என்ற மாணவி பெண்கள் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் 5.36 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

News March 11, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இன்று (11.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 11, 2025

சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

சேலம் வழியாக ஈரோடு- ஒடிஷா மாநிலம், சாம்பல்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மார்ச் 12 முதல் ஏப்ரல் 30 வரை சாம்பல்பூரில் இருந்து ஈரோட்டிற்கும், மார்ச் 14 முதல் மே 02 வரை ஈரோட்டில் இருந்து சாம்பல்பூருக்கும் ரயில்கள் (08311/08312) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 11, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மார்ச் 12, 19 தேதிகளில் ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108) ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோட்டிற்கு செல்லும். இந்த ரயில்கள் ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News March 11, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (11.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். 

error: Content is protected !!