India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆயுதப்பூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரால் சேலத்தில் 8 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 502 ஆம்னி பேருந்துகளை சோதனைக்கு உட்படுத்தியதில் 89 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூபாய் 1.59 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சேலம் மக்களே.. உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் தனியார் மைக்ரோ லேப் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் படித்து வருகின்றனர்.
செட்டிச் சாலை சேர்ந்த 27 வயது உடைய பெண்ணை உரிமையாளர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனை எடுத்து கன்னங்குறிச்சி காவல் துறையில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து உரிமையாளரை கைது செய்தனர்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (அக்.08) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பள்ளப்பட்டி, 3 ரோடு, போடிநாயக்கன்பட்டி, திருவாக்கவுண்டனுர் பைபாஸ், அம்மாசி நகர், புது பஸ்ஸ்டாண்ட், அழகாபுரம், சொர்ணபுரி, 5 ரோடு, ஓமலூர், சிக்கனம்பட்டி, காமலாபுரம், டேனிஷ்பேட்டை, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, ரெட்டியூர், கோட்டமேட்டுப்பட்டி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க!

தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்கத்தில் அரசு பள்ளிகளுக்கு விலையில்லா புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025- 2026 ஆண்டு சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 1,563 பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 16 ஆயிரத்து 944 மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகம் விநியோகிக்கும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. இரண்டு தினங்களுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக இன்று (அக்.07) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) சுமார் 08.25 மணி நேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர்.06) “SAY NO TO OVER SPEEDING.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

சேலத்தில் நாளை (அக்.7) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள் 1) எம் பாலாம்பட்டி – சுய உதவிக் குழு மண்டபம் எம் பாலாம்பட்டி 2) தாரமங்கலம் – பொன்னுசாமி திருமண மண்டபம் 3) ஜலகண்டாபுரம் – நாடார் உறவின்முறை திருமண மண்டபம் 4) கெங்கவள்ளி – அரசினர் உண்டு உறைவிடப்பள்ளி பெரிய பளக்கம் 5) சங்ககிரி – விஜய மஹால் வீராச்சிபாளையம் 6) காடையாம்பட்டி – ராமச்சந்திர மஹால் சின்ன திருப்பதி.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.06) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் (06.10.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.