Salem

News March 23, 2025

சேலத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் விமான நேரம் மாற்றம்.

image

சேலம் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சேலம் ஹைதராபாத்துக்கு இடையே இயக்கப்படும் இண்டிகோ விமானம் அதன் நேர அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது. இண்டிகோ விமான பயணம் ஹைதராபாத்தில் இருந்து 10.45AM புறப்பட்டுப் 12.35பின் சேலத்தில் இருந்து 12.55 PM புறப்பட்டு 14.50 PM சென்றடைய உள்ளது. இதனை இண்டிகோ விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News March 23, 2025

சேலம்: போக்குவரத்து கழகத்தில் 486 காலிப்பணியிடம்

image

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் கோட்டத்தில் 486 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். <>இங்கு கிளிக்<<>> செய்து ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம்.

News March 23, 2025

சேலம் மார்ச் 23 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மார்ச் 23 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 7 மணி ‘போதையில்லா தமிழகம்’ என்பது வலியுறுத்தி தன்னார் அமைப்புகள் சார்பில் மாரத்தான் (காந்தி ஸ்டேடியம்) ▶️ காலை 10மணி மாவீரன் பகத்சிங் வீர வணக்கம் (செவ்வாய்பேட்டை) ▶️காலை 10 மணி செவ்வாய்பேட்டை நெல் அரிசி உற்பத்தியாளர்கள் (சங்க மாவட்ட கூட்டம்) ▶️மாலை 5 மணி அனைத்து மணிகள் சங்க கூட்டமைப்பு பேரவை கூட்டம் (சீலநாயக்கன்பட்டி)

News March 23, 2025

பெண்ணின் கழுத்தை அறுத்து முன்னாள் காதலன் கைது 

image

வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் (27). அவரது மனைவி வனிதா (23). கடந்த 14ல், வாழப்பாடி அரசு பஸ் டிப்போ அருகே வனிதா சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சேலம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வனிதாவின் முன்னாள் காதலர் வேடராஜி (26), வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கினார். இந்தநிலையில்வாழப்பாடி போலீசார் நேற்று, வேடராஜை கைது செய்தனர். 

News March 22, 2025

சேலம்-காரைக்கால் ரயிலை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும்

image

நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பங்கேற்று பேசிய நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன், “சேலம்-கரூர், கரூர்-திருச்சி, திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயிலை இணைத்து சேலம்-காரைக்கால் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்த்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

News March 22, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News March 22, 2025

சேலம் மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும் ஏதேனும் விபத்துக்கள் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும் இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி மார்ச் மாதம் 22ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது

News March 22, 2025

சேலத்தில் நாளை மாபெரும் மாரத்தான் போட்டி

image

போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்று மாரத்தான் போட்டியை துவக்கி வைக்கவுள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது காலை 6:00 மணிக்கு இந்த மாரத்தான் போட்டி துவங்க உள்ளது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

News March 22, 2025

டெல்லி அணிக்கான களமிறங்கும் சேலம் நடராஜன்

image

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நடராஜன், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். மார்ச் 24 ஆம் தேதி லக்னோ அணிக்காக நடைபெறும் போட்டியில் நடராஜன் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டியில் நடராஜன் சிறப்பாக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 22, 2025

சேலம்: பணம் மோசடி வழக்கு EOW-க்கு மாற்றம்

image

சேலம், சொர்ணபுரி பகுதியில் திருவண்ணாமலை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பணம் இரட்டிப்பு தருவதாகக் கூறி பல நபரிடம் பணம் பெற்றுள்ளார். இதனையறிந்த போலீசார், நிறுவனத்தில் சோதனை செய்து, 3 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கானது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!