India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம்: தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் (28),மேச்சேரி தீராம்பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி (21) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நேற்று கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கார்த்திக், கொடுவாளால் வெட்டியதில் கஸ்தூரியின் இடது கை மணிக்கட்டு 5 விரல்களுடன் தனியாகத் துண்டாகி கீழே விழுந்தது.இந்தச் சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் இ<

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க!

சேலம் மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அது குறித்த விபரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் திரும்பி வரும் வரை காவல்துறையினர் பூட்டிய வீடுகளை கண்காணிப்பு செய்வார்கள் என, மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லியகரை துணை மின் நிலையம்,உடையாபட்டி துணை மின் நிலையம்,மேட்டுப்பட்டி துணை மின் நிலையம்,கருப்பூர் துணை மின் நிலையம் உள்ளிட்ட 4 பகுதிகளில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட 4 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHAREit

சேலம்: வாழப்பாடி அண்ணாநகரைச் சேர்ந்தவர்கூலித்தொழிலாளி ராஜ்குமார்(34). திருமணமாகாத இவர் தாய் அங்கம்மாளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் தனது தாய்க்கு உணவு வாங்கிக் கொண்டு நேற்று இரவு டூவீலரில் வீடு திரும்பிய போது, அண்ணாநகர் மாரியம்மன் கோயில் அருகே, பேளூரில் இருந்து பூக்கள் ஏற்றி வந்த மினி ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.12) “அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை விரைவில் பெறவும், பிற சேவைகளை பெறவும் காவல் உதவி செயலியை நிறுவிடுவீர்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

இந்தியன் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 171
கல்வித் தகுதி: B.E/B.Tech, B.Sc, M.Sc, MCA.
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.93,960 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: 13.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

சேலம் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.