India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் மார்ச் 28- ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ. ஆ. ப. தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்கள் தங்களது கேஒய்சி பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாம் வசிக்கும் பகுதியின் அருகாமையிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ஐஎம்பிடிஎஸ் மூலம் நாளை மார்ச் 25-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் 36 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை சேலம் மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இன்று மார்ச் 24- ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், பழைய நாட்டாண்மைக் கட்டிட வளாகம், சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது சுயவிவரக்குறிப்பு விவரத்தினை மண்டல உதவி இயக்குநர் கலை பண்பாட்டு மையம், திருப்பதிகவுண்டனூர் சாலை ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்-636302 என்ற முகவரிக்கு இன்று மார்ச் 24- க்குள் அனுப்ப வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மூலப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் , செந்தில்குமார்(50) , அவரது மனைவி செந்தமிழ் செல்வி(45). இவர்களுடன் லீலாவதி, பரத் ஆகியோர் இணைந்து தீபாவளி பண்டிகைக்கு கவர்சிகர முதலீடு திட்டங்களை அறிவித்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தியநிலையில் தீபாவளிக்கு முன் பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகினார். இது குறித்த புகாரின் அடிப்படையில் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 385 அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமை கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, தூய்மை பாரத இயக்க சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கலைஞரின் கனவு இல்லத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மூன்று குடோன்களில் பிரபல நிறுவனங்களில் காலாவதியான சிமென்ட் கட்டிகளை கொண்டு வந்து, அதனை அரைத்து போலியான சிமெண்ட் தயாரித்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆயிரம் மூட்டை சிமெண்ட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.
ஈரோடு மாவட்டம் சித்தார்கேசரிமங்கலத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆபரேட்டரான யுவராஜன் (வயது 34). இவர் நேற்று தனது நண்பர்களான மேச்சேரி பகுதியை சேர்ந்த 3 பேருடன் கூனாண்டியூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். யுவராஜன் ஆற்றில் இறங்கி குளித்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது கேலோ தேசிய பாரா விளையாட்டு போட்டியில் சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த அலெக்சாண்டர், ஆடவர் பிரிவில் F51 CLUB Throw-வில் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.