India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் உள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, தம்மம்பட்டி இஸ்லாமிய பொதுமக்கள் நேற்று மத நல்லிணக்கத்தை பேணிக்காத்து, ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு அபிஷேக பூஜை பொருட்களுடன் வருகை தந்தனர். பின்னர் கோவில் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போற்றினார்கள்.
சேலம்: நரசிங்கபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவர் வீட்டின் வெளியே நேற்று முன்தினம் இரவு சத்தம் கேட்க வெளிப்புற விளக்குகளை போட்டார். அப்போது 4 பேர் வேகமாக ஓடினர். வீட்டில் இருந்த சிசிடிவியை பார்த்தபோது, முகமூடி அணிந்த 4 பேர் டவுசர் மட்டும் அணிந்து அரை நிர்வாணத்துடன் வீட்டுக்கு வந்தது பதிவாகியிருந்தது. தங்கவேல் புகார்படி ஆத்துார் டவுன் போலீசார் டவுசர் கொள்ளையர்களை தேடுகின்றனர்.
சேலம்: ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (90). இவர் இறந்ததால் நேற்று மதியம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்தனர். அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அதிலிருந்து தீப்பொறி அங்கு வைக்கப்பட்ட பட்டாசு மூட்டையில் விழுந்து, மொத்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அருகே இருந்த 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலம் அய்யந்திருமாளிகையில் ஸ்ரீ சக்தி விநாயகர் குழு சார்பில், மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் வரும் காட்சியைப் போன்று குணா குகை போன்று பந்தல் அமைக்கப்பட்டு வாழை தோரணங்களுடன் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் பக்தர்கள் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருக விநாயகரை வழிபட்டனர்.
சேலம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் செப் 10 முதல் செப்.24 வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 26,478 பள்ளி மாணவ, மாணவிகளும், 13,273 கல்லூரி மாணவ, மாணவிகளும், 1,737 மாற்றுத்திறனாளிகளும், 1,246 அரசு அலுவலர்களும், 6,235 பொதுமக்களும் என மொத்தம் 48,969 நபர்கள் பதிவுச் செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 558 விநாயகர் சிலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அனுமதி இல்லாமல் யாரும் விநாயகர் சிலை வைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதி பெற்று விநாயகர் சிலை வைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில், 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் கோட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி சார்பில் செப்.14ல் நடைபெறவுள்ள குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வினை சேலம் மாவட்டத்தில் 46,856 பேர் எழுத உள்ளனர். சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய வட்டங்களில் 162 கூடங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு நாளன்று காலை 9-க்குள் தேர்வு கூடத்திற்குள் வருகை தருபவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம், சூரப்பள்ளி கிராமம், சோறையான் வளவு பகுதியில் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கும் பொழுது ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர் முகூர்த்தங்கள், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, சேலம் வ.உ.சி. பூ மார்கெட்டில் பூக்களின் விலை 2வது நாளாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி, முல்லை ரூ. 800 க்கும், கனகாம்பரம் ரூ.1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூஜை பொருட்களான ஒரு வாழை இலை ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.7க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய், வாழைப்பழங்கள் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.