India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓமலூர் அருகேயுள்ள வேடப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மைதிலி (19). இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. நேற்று மாமனாருடன் மைதிலி ஜெராக்ஸ் எடுப்பதற்காக தாரமங்கலம் பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து திடீரென மைதிலியை காணவில்லை. 8 மாத குழந்தையுடன் அவர் மாயமானார். இதுகுறித்து மைதிலியின் தாய் செல்வி தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் தாரமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாரமங்கலம், காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சீட்டுக்காகவும் ஓட்டுக்காகவும் விசிகவின் மதுவிலக்கு மாநாட்டில் பாஜகவை புறக்கணிக்கிறார்கள் என்று சேலத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவின் சேலம் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு திமுகவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் எம்பியுமான டி.எம்.செல்வகணபதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது சிலைக்கு இன்று (செப்.17) காலை 10 மணிக்கு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று (செப்.17) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 17,014 கனஅடியிலிருந்து 12,083 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 110.050 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 78.479 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 23,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் செப்.20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் செப்.20ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்.
சேலம் மாவட்ட நிர்வாகத்தால் ஓமலூர் டோல்கேட் அருகே உள்ள ஸ்ரீ பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் செப்.19ம் தேதி காலை 09.00 மணி முதல் ஆட்சியர் தலைமையில் கல்விக்கடன் மேளா நடைபெற உள்ளது. இளங்கலை, முதுகலை கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விக்கடன் மேளாவில் பங்கேற்று பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தில் திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டி சினிமா விநாயகர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில், மேயர் ராமச்சந்திரன், ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் நிர்வாகிகள் கீதா ராமநாதன், டாக்டர் ராதிகா ராணி, ஸ்ரீரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.