Salem

News October 8, 2024

சேலம் அரசு மருத்துவ கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு!

image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வராக தேவி மீனாள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

News October 8, 2024

தேசிய அஞ்சல் வார கொண்டாட்டங்கள்

image

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் வரும் இன்று முதல் அக்.11-ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. அக்.8ம் தேதி தபால்தலை சேகரிப்பு தினம், அக்.9ம் தேதி உலக அஞ்சல் தினம் உள்ளிட்ட தினம் கொண்டாடப்படவுள்ளதாக சேலம் கிழக்கு கோட்டத்தின் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (அக்.7) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, சக்கர நாற்காலி, நவீன காதொலிக் கருவி என மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு ரூ.19,050 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News October 7, 2024

சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

image

சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.இராஜேந்திரன் இன்று வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்புத் துறையின் சார்பில் அவசரகால மீட்புக்கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் உள்ளனர்.

News October 7, 2024

அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

image

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (அக்.7) காலை சேலம் அலுவலகத்தில் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அனைத்துத்துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில், அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில், ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News October 7, 2024

சேலம் மாவட்டத்திற்கு மழை

image

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சேலம் மாநகர் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழை தேங்கி நின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இரவு 10 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

News October 7, 2024

சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 6382786648, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 7, 2024

சேலத்தில் இபிஎஸ் பேட்டி

image

மிகப்பெரிய கால்நடை பூங்கா அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதற்கு தேவையான தண்ணீருக்காக தனி குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். அதனை சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வது சரியா? கால்நடைப் பூங்காவிற்காக தண்ணீரை சிப்காட்டுக்கு கொண்டு செல்வதை ஏற்க மாட்டோம். சட்டரீதியாக சந்திப்போம் அதிமுக ஆட்சி வரும்போது இதனை ரத்து செய்வோம் என்று சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று பேட்டியளித்தார்.

News October 7, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,000 கன அடியாக அதிகரிப்பு

image

இன்று (அக்.07) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,713 கனஅடியிலிருந்து 15,710 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 92.58 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 55.64 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

News October 7, 2024

சேலத்தில் உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு

image

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்/ உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் (or) www.tamilvalarchithurai.tn.gov.inஇல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் அக்.31-க்குள் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!