India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நேற்று புதிதாக சுற்றுலாத்துறை அமைச்சராக சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கத்தின் Bio-வை அமைச்சர் ராஜேந்திரன் என மாற்றிக்கொண்டார்.
சேலம், பனமரத்துப்பட்டியைில் 1980ல் திமுக மாணவர் அணி உறுப்பினராக சேர்ந்தர். 1992-1999ல் சேலம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பளாரானார். 2006ல் பனமரத்துப்பட்டியில் வெற்றி பெற்று முதல்முறை எம்எல்ஏ ஆனார். 2016-ல் சேலம் வடக்கு தொகுதியில் வென்றார். 2021ல் மீண்டும் சேலம் வடக்கு தொகுதியில் வென்றார். நேற்று அமைச்சராக பொறுப்பேற்றார். சேலத்தில் 11 தொகுதியில் திமுக 1 தொகுதியில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 2,718 கன அடியிலிருந்து 3,284 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 95.300 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 58.920 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் அக்.03ஆம் தேதி காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கல்விக்கடன் மேளா நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் இந்த முகாமில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.ராஜேந்திரன், சென்னையில் தி.மு.க.வின் மூத்த தலைவர்களும், எம்.பிக்களுமான டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதேபோல், அமைச்சர் கே.என்.நேருவையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, தி.மு.க.வின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து ஆர்.ராஜேந்திரன், நேற்று மாலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு நேரில் சென்று மலர்தூவியும், மலர்வளையம் வைத்தும் மரியாதைச் செலுத்தினார். அதேபோல், புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன் ஆகியோரும் தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினர்.
சேலம் அயோத்தியபட்டணம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, “அதிமுக எனும் கடலில் கப்பலில் இருந்து தவறி விழுந்த சிலர், மீண்டும் ஏற முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர்” என பேசினார். மேலும், எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி அதிமுக கப்பலை சிறப்பாக ஓட்டி செல்கிறார் என்று கூறினார்.
சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் தங்கள் குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தலைவர் இரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து சிறுத்தையை சுட்டுக்கொன்றதாக கூறி வீடு வீடாக வனத்துறையினர் விசாரித்து அச்சுறுத்தி வருவதாக கிராம மக்கள் இன்று எம்.எல்.ஏ. சதாசிவத்திடம் புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சைமலை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாலத்தாங்கரை மலை கிராமத்தை சேர்ந்த பிச்சமுத்து என்பவருடைய தோட்டத்தில் உள்ள பட்டியில் மூன்று கன்றுக்குட்டியை அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை கடித்து உள்ளது. அதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.