India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், திப்பம்பட்டியைச் சேர்ந்த சென்னன் (65) என்ற முதியவர், தனது மகள் சுதா (38), பேரன் விஷ்ணு (12) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது நாமக்கல்லுக்கு சென்றுகொண்டிருந்த லாரி மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சுந்தர்ராஜனை மல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில், இயங்கி வரும் அரசு மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்களில் மது விற்பனை ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவுபெறவில்லை; சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார்; மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று (செப்.30) சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், பாமகவின் நிர்வாகிகள் உள்பட 44 பேரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
“இனி வருங்காலத்தில் இத்தகைய பள்ளங்களை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளின் பேரில் உச்சநீதிமன்றம் ஜாமீன் தந்துள்ளது; நிபந்தனைகளை செந்தில் பாலாஜி மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகம். திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படவில்லை” என சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் குறைந்த வட்டியில் வங்கிக் கடனுதவி பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது
பீகார் மாநிலம், பாட்னாவில் நடந்த 4வது இந்திய ஓபன் தடகளப் போட்டியில் கலந்துகொண்ட சேலம் ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு பயிலும் மாணவி கோபிகா, உயரம் தாண்டுதல் பிரிவில் 1.76 மீ உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மாணவிக்கு கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
சேலம் உருக்காலையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் எஃகு துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமியை நேரில் சந்தித்து, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கோரிக்கை மனுவை வழங்கினார். உருக்காலைக்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில், அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே திருப்பி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர்.வி.ஸ்ரீராம் தலைமையில் இன்று சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஆவின் செல்வமணி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதி வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு சென்ற அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் இன்று (செப்.30) காலை தனது அலுவலகத்தில் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சருக்கு சுற்றுலாத்துறையின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து மற்றும் சால்வை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.